திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா..25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு..மலையேற 2,500 பேருக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மகா தீப திருநாளில் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக 200 கிலோ எடை கொண்ட 5 அடி உயரம் கொண்ட கொப்பரை பயன்படுத்தப்படும்.

மலை மீது மகா தீபம்

மலை மீது மகா தீபம்

அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

சிவபெருமான்

சிவபெருமான்

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். அப்போது அங்கு வந்த சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று போட்டி வைத்தார் சிவன். ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன்.

பொய் சொன்ன பிரம்மா

பொய் சொன்ன பிரம்மா

அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தாழம்பூ ஒன்றின் மடல். தென்பட்டது. பிரம்மாவுக்கு ஆச்சரியம், பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்தது எப்படி என்று பூவிடமே கேட்டார். தான் சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் பொய் நாடகம் போட முடிவு செய்தார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக தான் கூறப்போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள்.

தீபம் ஏற்றுவதன் தத்துவம்

தீபம் ஏற்றுவதன் தத்துவம்

ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன், இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும் பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம்பூவை நான் தரிக்கமாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி இந்த பூமியில் பூஜையும் இல்லை கோவிலுமில்லை என்று கூறினார். உடனே மன்னிப்பு கேட்டார் பிரம்மா, தாங்கள் இருவரும் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீப விளக்கு ஏற்றுவதன் தத்துவமாகும்.

25 லட்சம் பக்தர்கள்

25 லட்சம் பக்தர்கள்

இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், தீபத்திருவிழாவில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றார்.

மலை ஏறுவதற்கு அனுமதி

மலை ஏறுவதற்கு அனுமதி


இங்கு மலையே சிவமாக போற்றப்படுவதால் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது, இந்த ஆண்டு 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

என்னென்ன ஏற்பாடுகள்

என்னென்ன ஏற்பாடுகள்

தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். மேலும், 12,400 கார்களை நிறுத்தும் இட வசதியுடன் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடைகள் இயக்கப்படும். கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் ஆயிரம் மாணவர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள். கோயில் பிரகாரங்களில் 169 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப்பாதையில் 9 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். முக்கிய இடங்களில் 57 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+