Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோயற்ற வாழ்வு.. உங்க கிச்சனில் இருக்கு சீக்ரெட்.. வாஸ்து டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தாலே தேவையற்ற மருத்துவ செலவுகள் வராது. விரைய செலவுகள் குறைந்ததாலே செல்வம் சேரும் அன்னை மகாலட்சுமியின் அருளினால் வளம் பெருகும். நம்முடைய வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்யுங்கள் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

நம்முடைய ஆரோக்கியமே செல்வத்தில் எல்லாம் மிகப்பெரிய செல்வம். எனவேதான் முன்னோர்கள் வைத்தியருக்கு குடுப்பதை வாணியருக்கு கொடுக்கலாம் என்று சொல்லி வைத்தனர். நன்றாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாம் சமைக்கும் உணவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அம்மாவின் கை பக்குவம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையல் அறை சரியான திசையில் இருப்பதும் அவசியமாகிறது. மனிதர்களின் ஆரோக்கியம், செல்வ வளத்தை பாதுகாப்பதில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Vastu Tips for Good Health: How to benefit from Vastu and seek blessings from Goddess Lakshmi

வாஸ்து தோஷம் நிறைந்திருக்கும் வீட்டில் ஏதாவது சண்டை, வீண் செலவுகள், பண விரையம், தேவையற்ற பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடு வந்து கொண்டே இருக்கும். சிலர் புது வீடு கட்டி போன நாளில் இருந்தே மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பார்கள். புது புது நோய்கள் வந்து பாடாய் படுத்தும் அதற்குக் காரணம் அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுதான். நாம் சரியான முறையில் வாஸ்துபடி வீட்டில் சில மாற்றங்களை செய்தால் நம்முடைய வீண் விரைய செலவுகளை தடுக்கலாம்.

நாம் உறங்கும் இடம் தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறை இருப்பது சிறப்பு. தெற்கு பக்கம் தலை வைத்து உறங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாதம், கபம் உடல் அமைப்பு உள்ளவர்கள் இடது பக்கம் திரும்பியும் பித்த உடல் அமைப்பு உள்ளவர்கள் வலது பக்கமாகவும் உறங்க வேண்டும்.

அக்னி மூலை எனப்படும் நெருப்பு புழங்கும் இடத்தில்தான் கிச்சன் வைக்க வேண்டும். அந்த திசையில் போய் படுக்கை அறை வைப்பது சரியானது அல்ல. அந்த மூலையில் கழிவறை கட்டி அங்கே செப்டிக் டேங்க் கட்டுவது இல்லத்தரசிக்கு நோய் பாதிப்பினை ஏற்படுத்தும். அதே போல தென்கிழக்கு திசையில் நிலத்தடி நீர் தொட்டி அமைத்திருப்பதும் சரியான விசயமல்ல.

அதே போல வீட்டின் மையப்பகுதி எனப்படும் பிரம்மஸ்தானம் காலியாக இருக்க வேண்டும். சிலர் வீட்டின் மையப்பகுதியில் படிக்கட்டுகளை அமைத்திருப்பார்கள். அது சரியானதல்ல. இது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே படிக்கட்டுகளை தென்மேற்கு மூலையில் வைப்பது சிறப்பு. பிரம்மஸ்தானத்தில் கனமான பொருட்களை போட்டு வைத்தால் அது வீட்டில் தேவையற்ற சண்டை, பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Vastu Tips for Good Health: How to benefit from Vastu and seek blessings from Goddess Lakshmi

கனமான தூண்கள், பில்லர்கள், விட்டங்கள் எதுவும் பிரம்மஸ்தானத்தில் இருக்கக்கூடாது. பிரமீடு அமைப்பு பிரம்மஸ்தானத்திற்கு மேலே இருப்பது உற்சாகத்தை தரும். தென்மேற்கு பகுதி எனப்படும் குபேர மூலை பகுதி ஒருபோதும் திறந்திருக்கக்கூடாது. அந்த திசையில் கழிவறை இருக்கவே கூடாது. அது உடல் நலத்திற்கு கேடு தரக்கூடியது.

நாம் வீடு கட்டும் போது சமையல் அறையை சரியான திசையில் கட்டுவது அவசியம் அதே போல தென்மேற்கு மூலையில் எந்த தவறும் ஏற்படாத வகையில் அறைகளை அமைக்க வேண்டும். வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையில் கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவது நல்லது. கார் ஷெட் எல்லாம் வடகிழக்கு மூலையில் கட்டுவது தவறான அமைப்பாகும். வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் விநாயகர், அனுமன் படத்தை வைப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+