வாஸ்து டிப்ஸ்.. வெற்றி மீது வெற்றி வந்து சேர.. மறந்தும் கம்ப்யூட்டரை இந்த திசையில் வைக்காதீங்க
சென்னை: நம்முடைய வேலை தொழிலில் வெற்றிகள் தேடி வர நாம் சில பொருட்களை சில இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான டிவி, கம்ப்யூட்டர் போன்றவைகளை சில திசைகளில் வைத்தால் மட்டுமே நமக்கு பண வருமானம் வரும். தெரியாமல் சில மூலைகளில் கம்ப்யூட்டரை வைத்தால் அது அடிக்கடி ரிப்பேர் ஆகும்.
நம்முடைய வீட்டில் வைக்கும் பொருட்கள் சரியான திசையில் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். ஏசி, ஏர்கூலர், ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை சரியான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். தவறான திசையில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.

அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலும் ராகுவும் சனியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவற்றை சரியான இடத்திலும், சரியான திசையிலும் வைக்க வேண்டும். வீட்டின் வரவேற்பு அறையில் டிவி இருக்கும். சிலர் படுக்கை அறையில் சிறியதாக டிவி வைத்திருப்பார்கள். பொதுவாகவே கிழக்கு திசை சுவற்றிலோ அல்லது வடக்கு திசை சுவற்றிலோ டிவியை வைக்கலாம். இதன் மூலம் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
இன்றைய சூழ்நிலையில் கம்ப்யூட்டர், லேப்டாப் இல்லாத வீடுகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ கம்ப்யூட்டரை வைக்க வேண்டிய சரியான திசை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. செய்யும் வேலையில் வெற்றி கிடைக்க வடக்கு திசையில் கம்ப்யூட்டரை வைப்பது நல்லது. எப்போதுமே கிழக்கு, வடக்கு திசை நோக்கி வேலை பார்ப்பது ஆர்வத்தை அதிகரிக்கும். ஆன்மீகம், ஜோதிடம் தொடர்புடைய துறையில் வேலை செய்பவர்கள் கம்ப்யூட்டரை தெற்கு திசையில் வைப்பது நல்லது. இந்த திசை மன நிம்மதியையும் தெளிவான சிந்தனையையும் தரும்.
படுக்கை அறையில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவைகளை அமைக்க நேர்ந்தால் வடகிழக்கு பகுதியில் வைக்கலாம். ஏசி என்பது குளிர்ந்த காற்றினை நமக்கு தரக்கூடியது எனவே வீட்டின் படுக்கை அறையில் வடமேற்கு திசை காற்றின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் ஏசியை வைத்தால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும்.
சந்திரன், சனி, ராகு மற்றும் புதன். ஜோதிட சாஸ்திரத்தின்படி காற்றின் திசையும், சந்திரனின் திசையும் வடமேற்காக கருதப்படுகிறது, எனவே ஃப்ரிட்ஜ் வைக்கும் போது வடமேற்கு திசையில் வைக்கலாம். வடமேற்கு திசையில் இடமில்லாவிட்டால் கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும் பொருட்களின் ஆற்றலுக்கு நேர்மறை சக்தி அதிகரிக்கும். உங்கள் வீட்டின் சமையல் அறையில் வாட்டர் பியூரிஃபையரை கிழக்கு, வடகிழக்கு, அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். இல்லாவிட்டால் அடிக்கடி அது ரிப்பேர் ஆக வாய்ப்பு உள்ளது. பாத்திரம் கழுவும் சிங்க் வைத்திருப்பதற்கு நேர் மேலே வாட்டர் பியூரிஃபையரை வைக்கலாம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications