விருச்சிகம் ராசி ஸ்பெஷலே இதுதான்.. மனசு பூரா அன்பு.. விருச்சிக ராசிக்காரர் எந்த ராசியினரை மணக்கலாம்
சென்னை: ரகசியங்களை கடைசிவரை காக்கக்கூடியவர் விருச்சிக ராசிக்காரர்கள்.. இந்த விருச்சிக ராசிக்காரர்களின் பொதுப்பலன்கள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த ராசியினரை விருச்சிகம் ராசிக்காரர்கள் திருமணம் செய்யக்கூடாது? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் கூர்மையான அறிவு கொண்டவர்கள்.. கோபம், அன்பு, வேலை என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்..

விருச்சிகம்: ஒரு இலக்கு நிர்ணயித்துவிட்டால், அதை அடைந்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கக்கூடியவர்கள்.. எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்கள். தலைமை பதவியும் இவர்களை தேடி வரும். அப்படி வரும்போது, இவர்களது தலைமையிலான நிறுவனம், அல்லது குடும்பம், நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துவிடுமாம்.
தனிமையை விரும்பக்கூடியவர்கள்.. கலகலவென பேசமாட்டார்கள்.. மர்மமானவர்கள்... அமானுஷ்யம், குற்றம், இறப்பு போன்ற விஷயங்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால், அனைத்து விஷயங்களையும் தங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்வார்கள். பிறரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நெருக்கம்: தேவையற்றதையும் பேச விரும்பமாட்டார்கள்.. விருச்சிக ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்கார்களுடன், அதிக நெருக்கமாக இருப்பார்கள். காரணம், இந்த ராசிக்காரர்களால் மட்டுமே அவர்களை புரிந்து கொள்ள முடியுமாம். ஆனால், இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.. அந்த நகைச்சுவையும் அறிவாற்றல் நிறைந்தவையாகவே இருக்கும்.. அனைவரும் விரும்பும்படியான காமெடியாகவும் இருக்கும்.
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டினாலும், அதை விளையாட்டாகவே பேசி, அந்த குற்றம், குறைகளை எடுத்து சொல்லக்கூடியவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள்.. வீண் செலவுகள் செய்யாமல், சிக்கனத்தை கடைப்பிடிப்பார்கள்..
படைப்பாற்றல்: விருச்சிக ராசிக்காரர்கள், படைப்பாற்றல் மிக்கவர்கள்... கலை, இசை, எழுத்து என படைப்புகளில் ஆர்வம் காட்டுவார்கள்.. இந்த துறையில் சிறந்த விளங்குவார்கள். பிறருக்கு மகிழ்ச்சியுடன் உதவும் கொண்டவர்களாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் உங்களுக்கு நண்பராக இருந்தால், உங்கள் ரகசியங்களை தாராளமாக அவரிடம் நம்பி சொல்லலாம். அதை யாரிடமும் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் அன்புக்குரியவர்களின் ரகசியம் என்றால், அதை கடைசி வரை பாதுகாப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த தெரியாது.. காதல் முறிந்துவிடுமோ என்ற பயத்திலும் இருப்பார்கள்.. இதனால் காதல் விவகாரத்தில் ஏதோ ஒரு தடை அவர்களிடம் தென்பட்டு கொண்டேயிருக்கும்.. அந்த தடை என்னவென்று கண்டுபிடித்து உடைத்துவிட்டால், அதற்கு பிறகு, அன்பை வாரி வாரி கொட்டுவார்கள்.. அந்த அன்பு உண்மையானதாகவே இருக்கும்.
மீனம், கடகம்: எல்லா ராசியைச் சேர்ந்தவர்களுக்கும் சமசப்த ராசியான ஏழாம் ராசிக்காரர்களை திருமண உறவில் சேர்ப்பது வழக்கமாகும்.. ஆனால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அதன் சமசப்த ராசியான ரிஷப ராசிக்காரர்களை சேர்க்கக் கூடாது. ஏனென்றால், விருச்சிக ராசியில் நீசமடையும் சந்திரன், ரிஷப ராசியில் உச்சமடைகிறார். எனவே, இவர்களுக்கு பதிலாக, மீன ராசிக்காரர்களை மணந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பார்கள்.. இதேபோல கடகராசிக்காரர்களுடன் திருமணம் நடந்தாலும், அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையுமாம்.
விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பார்வையிலேயே கட்டுப்படுத்தி விடுவார்கள்.. அந்த அளவுக்கு பார்வை வசியம் கொண்டவர்களாம்.. கடக மீன ராசிக்காரர்கள் மட்டுமே இவர்களது புரிந்து கொண்டு, சந்தோஷமாக இணக்கமாக பழக முடியும்.. அடுத்து, ரிஷபம், கன்னி, மகரம் ராசியினரும் இவர்களோடு ஒத்துப்போக முடியுமாம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications