For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரியனை தினமும் இப்படி வணங்குங்கள்..நீங்களே எதிர்பார்க்காத வளர்ச்சி வீடு தேடி வரும்

காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும். உச்சி வெயிலில் உள்ளங்கைகளை காட்டக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும். காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும். சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளவும் இதுபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.

சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும் எப்படி செய்தால் செல்வம் பெருகும் என்பதற்கு சில சூட்சும விதிகள் உள்ளன.

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். நாம் ஆரோக்கியமாக இருந்தாலே செல்வ வளமும் அதிகரிக்கும்.

அரசு வேலை தரும் பானு சப்தமி விரதம் - இந்த ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க அரசு வேலை தரும் பானு சப்தமி விரதம் - இந்த ஞாயிறு சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க

காலையில் சூரிய ஒளி

காலையில் சூரிய ஒளி

காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும். பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும். சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைமேல் ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளவும் இதுபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இதை வெறும் வயிற்றோடு செய்ய வேண்டும், பிறகு தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.

காலையில் எப்படி வணங்குவது

காலையில் எப்படி வணங்குவது

காலை சூரிய கதிர்களை பிரம்மா சரஸ்வதியாக பாவித்து சூரியனை பார்த்து உள்ளங்கையை காண்பித்து தலைக்கு மேல் வைத்து எடுக்கவும். இதுபோல் மெல்ல மூன்று தடவை செய்யவும், காலை வேளை மட்டுமே கூறிய தினங்களில் தண்ணீரில் நின்று பிராத்திக்கவும். மாலையில் அவ்வாறு செய்யக்கூடாது. கல்வி ஞானம் வளருவதோடு செல்வ வளமும் சேரும்.

மாலையில் எப்படி வணங்குவது

மாலையில் எப்படி வணங்குவது

மாலை வேளை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து இரு கைகளையும் வயிற்று தொப்புளுக்கு நேராக வைத்து வணங்கி தொப்புளில் இரு கைகளையும் வைத்து எடுக்கவும். மூன்று முறை இதுபோல் செய்யவும். செல்வத்திற்கான கோரிக்கையை தெளிவாக அன்றாடம் வேண்டவும், இவ்வாறு செய்தால் செல்வ வளம் கூடும். தொப்புள் லக்ஷ்மி ஸ்தானம் அங்கு லக்ஷ்மி நாராயணரை மாலை வேளை வணங்கி லட்சுமி ஸ்தானத்தில் குவித்த கர சக்திகளை வைத்தால் செல்வ வளம் கூடும். இந்த முறைகள் கல்வி,செல்வம், ஞானம் இவைகளுக்கான
வழிபாடு முறையாகும்.

லட்சுமி நாராயணர்

லட்சுமி நாராயணர்

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை சூரியன் மறைவு நேரத்தில் மேற்கு பக்கமாக நின்று இரு கைகளையும் வயிற்றுக்கு நேராக வைத்துக் கொண்டு ஒன்று சேர்த்து சூரியனை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து வணங்க வேண்டும். வணங்கி இரு உள்ளங்கைகளையும் தொப்புள் மேல் படும்படி வைத்து எடுக்க வேண்டும். ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் செய்வது முழு பலன் கொடுக்கும்.

எப்படி வணங்குவது

எப்படி வணங்குவது

பெண்கள் தொப்புளை இறுக்கி கட்டும் ஆடையை சற்று தொப்புளை இறுக்காமல் தளர்த்தி கட்டிக் கொண்டோ வழிபாடு செய்ய வேண்டும். அவசியம் உடலில் சூரிய கதிர்கள் படவேண்டும். நின்ற நிலையில்தான் வணங்க வேண்டும், மேக மூட்டமாகவோ, மரங்கள் மறைத்தோ,உயரமான கட்டிடங்கள் மறைத்தோ இருந்தால் பலன் இல்லை. அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் வணங்கலாம் தாமதமாகவும் பலன் கிடைக்கும்.

 எந்த நாளில் வழிபடலாம்

எந்த நாளில் வழிபடலாம்

சூரியனை தினசரியும் காலையில் மாலையில் வணங்குவது சிறப்பு என்றாலும் தமிழ்மாத முதல்நாள், வெள்ளி,சனி, ஞாயிறு, திங்கள் இந்த நாட்களிலும் பௌர்ணமி,அமாவாசை, ஆகிய தினங்களில் தண்ணீரில் நின்று கூறியபடி சூரிய கதிர்களை பெற்றால் அற்புதமான செல்வ வளத்தையும், மங்காத புகழ் வளத்தையும் பெறலாம்.

உச்சி சூரியன் படக்கூடாது

உச்சி சூரியன் படக்கூடாது

உச்சி சூரியன் மதியம் 12 ல் இருந்து 1 மணி ருத்ரவேளை இந்த கதிர்கள் உங்கள் இரு உள்ளங்கைகளிலும் நேரிடையாக படக்கூடாது. இன்றும் கூட உச்சி வேளையில் வெளியில் அனாவசியமாக போகாதீர்கள் என்று முன்னோர்கள் சொல்வார்கள். செல்வம் வற்றி கடன்பட வைக்கும். எனவே உச்சி வெயிலில் உள்ளங்கைகளை காட்டாதீர்கள், காலை, மாலை நேரத்தில் சூரிய பூஜை செய்தாலும் மற்ற எந்த பூஜை வழிபாடு செய்தாலும் உச்சி வேளை கதிர் உள்ளங்கை கண்டால் எல்லாம் செயலிழக்கும், எனவேதான் ஆலய அர்ச்சகர்கள் 12 மணிக்கெல்லாம் ஆலயத்தை மூடிவிடுவார்கள். உள்ளங்கையில் ஒரு வேளை தெரியாமல் சூரிய ஒளி கதிர்கள் நேரிடையாக பட்டு விட்டால் தரித்திரம் ஆட்கொள்ளக்கூடாது என்பதற்காக மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை உள்ளங்கையில் வைத்து காத்துக் கொண்டனர். எனவே உச்சி சூரிய கதிர்கள் நம் உள்ளங்கையில் படக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

English summary
Lakshmi will be blessed if the sun's rays fall on us. The dawn of the morning should radiate the rays of the young sun into the palms of both our hands. Do this three times while looking at the sun and showing both palms for a while and keeping those hands on the head for a minute. Ancestors have said that the sun should not fall on the palms at the peak of the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X