கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது - மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவக்கூடிய சூழலில் விழாவை நடத்த எப்படி உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழ
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறியுள்ள நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா என்பது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும்.

மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து பகதர்கள் வருவார்கள்.
மதுரையில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சார்பாக இந்த விழா என்பது இந்த வருடமும் பக்தர்கள் அனுமதி இன்றி உரிய விதிமுறைகளை பின்பற்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
இந்த திருவாலவாய் பக்தர்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அருண் போத்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்; மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் போன்றவை 50 சதவிகிதத்துடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாகத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதன் காரணமாக அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

ஆகவே பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது. கொரோனா தொற்று தீவிரமாக பரவக்கூடிய சூழலில் விழாவை நடத்த எப்படி உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, அவ்விழாவிற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அருண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications