திடீரென முடிவடையப்போகிறதா? பாக்கியலட்சுமி.. வெளியான புகைப்படங்கள்.. இதுதான் காரணமாம்!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அணியினர் திடீரென புது கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 700 நாட்களை தாண்டி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புது கொண்டாட்டங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 700 நாட்களை தாண்டி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வெற்றியை சீரியல் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடிய மகிழ்ந்திருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்டிங்க்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பாக்கியாவும் ராதிகாவும் கோபியால் பிரிந்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் இது 700 ஆவது நாள் கொண்டாட்டமா? அல்லது கடைசி முடிவா என்று தெரியவில்லையே என கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

பிடிக்காத திருமணம்
பாக்கியலட்சுமி சீரியல் ஒரு பெங்காலி சீரியல், இந்த சீரியல் மேகா என்கிற சீரியலின் தமிழ் ரீமேக் தான். இந்த கதையில் கோபிக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி பாக்கியா அவரை வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலினால் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதால் பாக்யாவை எப்போதும் கடுமையாகவே நடத்தி கொண்டு இருந்தார். பாக்யாவிற்கு இரண்டு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். பாக்கியாவை தான் கோபிக்கு பிடிக்காதே தவிர குழந்தைகளை அதிகமாகவே பிடிக்கிறது. இந்த நிலையில் மகனுக்கு திருமணம் முடிந்த பிறகு தனக்கு பிடித்த ராதிகாவை திருமணம் செய்வதற்காக பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ராதிகாவை திருமணம் செய்து இருக்கிறார்.

விடாத முயற்சிகள்
ஆரம்பத்தில் இருந்தே பாக்கியா தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியோடு ஒவ்வொரு செயலில் வெற்றிக் கொண்டிருக்கிறார். பல்வேறு அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து வந்த பாக்கியா தனியாக கஷ்டப்பட்டு ஒவ்வொரு செயலில் சாதிக்கின்றார். அதை பார்க்கும் குடும்பத்து பெண்கள் ரசிகர்கள் பாக்யாவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். பாக்கியா ஒவ்வொரு செயலிலும் ஜெயித்ததை பார்க்கும்போது தாங்களே ஜெயித்தது போல சந்தோஷமிட்டு வருகின்றனர். கோபி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சமையல் ஆர்டர் எடுத்து அதுவும் கோபியின் திருமணத்திலும் அந்த சமையல் ஆர்டரை பாக்யாவே சிறப்பாக செய்து முடித்து இருந்தார்.

டிஆர்பியில் முதலிடம்
இனியாவும் தற்போது பாக்யாவை பிரிந்து கோபியோடு சேர்ந்துவிட்ட நிலையில் இனியாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி காட்டிக் கொண்டும், அதே நேரத்தில் தன்னுடைய வேலையிலும் கவனத்தை செலுத்தி வரும் பாக்யாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதனாலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி யில் முதலிடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் விரைவில் ஜெனியின் வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற இருக்கிறது. அந்த கொண்டாட்டத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் 700 நாட்களை கடந்து விட்ட மகிழ்ச்சியையும் கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications