பிக் பாஸுக்குள் நடந்த திடீர் கலவரம்.. தப்பு யார் மீது? லட்சுமி பிரியா மீதா? ஆனந்தி மீதா?
சென்னை: பிக் பாஸ் டீம் எதிர்பார்த்தது மாதிரியே இன்று நடந்த டாஸ்க் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. அதாவது இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அதில் ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா இருவருக்கும் அடிதடி ஏற்பட்டிருக்கிறது. இதில் யார் மீது தப்பு என்ற காட்சிகளும் 24 மணி நேர எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அதில் சில விஷயமும் கவனிக்க வேண்டியது இருக்கிறது.
அதாவது இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கூடாரத்திற்குள் சில ஓட்டைகள் போடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டை வழியாக தலையை யார் அதிக நேரம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் வின்னர் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்காகவே உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும், சண்டைகளும் நடக்கிறது.

இதை எதிர்பார்த்துதான் பிக் பாஸ் இது போன்ற ஒரு டாஸ்க் வைத்தது. டீம் எதிர்பார்ப்பதற்கு போட்டியாளர்கள் செமையாக பர்பாமென்ஸ் செய்து விட்டார்கள். ஒரு கட்டத்தில் அஸ்மிதா ஒரு ஓட்டையில் தொங்கிக் கொண்டிருக்க, அவரை கீழே இறக்க லட்சுமி பிரியா முயற்சி செய்யும்போது அவர் கீழே விழுந்து விடுகிறார். உடனே லட்சுமி பிரியாவும், சாதிகாவும் தூக்கி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
போட்டியாளர்களுக்குள் அடிதடி
அப்போது லட்சுமி பிரியா குனிந்து நிற்கும் சமயத்தில் ஓடி வந்த ஆனந்தி படத்தில் ஜம் பண்ணுற மாதிரி அங்கிருந்த ஸ்டூலில் ஒரு கால் வைத்து துள்ளி, லட்சுமி பிரியாவின் முதுகில் இரண்டு காலும் வைத்து ஓட்டையை பிடிக்க முயற்சி செய்தார். கடைசியில் கை தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் லட்சுமி பிரியா கடுப்பாகிவிட்டார். தன்னுடைய முதுகில் ஏறி நின்று தான் இப்படி நீங்க விளையாடுவீங்களா என்று கோபப்பட்டு திட்டி கொண்டு இருந்தார். ஆனாலும் சும்மா விடவில்லை அதற்கு பிறகு லட்சுமி பிரியா ஆனந்தியை மேலே ஏறி நிற்கவே விடாமல் அவரை தள்ளிவிட்டுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ஆனந்தி கீழே விழுந்ததில் அடிபட்டு விடுகிறது.

பிக் பாஸ் டாஸ்க்
அப்போது அங்கிருந்தவர்கள் தான் அவரை வெளியே கூட்டிக்கொண்டு வருகின்றனர். பிக் பாஸ் டாக்டர் டீம் வருகிறது என்று சொன்னபோது கூட வேண்டாம் இப்போ ஓகே வாகி விட்டேன் என்று ஆனந்தி மறுத்துவிட்டார். ஆனால் இந்த காட்சிகள் பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் பயங்கரமாக தான் இருக்கிறது. என்னங்க ஒரு டாஸ்க்கில் ஜெயிக்கிறதுக்காக இவ்வளவு அடிதடி வேண்டுமா? என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் அதற்கு பிறகு லக்ஷ்மி பிரியா சும்மா இல்லை தன் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு போட்டியாளரிடமும் சென்று அவர்தான் என் முதுகில் முதலில் ஏறி நின்று அந்த ஓட்டையை பிடிக்க முயற்சி செய்தார். அதில் எனக்கு அடிபட்டிருந்தால் என் கழுத்துக்கு போயிருக்குமே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
யார் மீது தப்பு
ஆனந்தி செய்ததும் தப்புதான், லட்சுமி பிரியா செய்ததும் தப்புதான். ஏற்கனவே போன வாரம் வினோத் அணியினர் மனிதாபிமானத்தோடு சாப்பாடு தட்டை கழுவி வைத்து விட்டார்கள் என்று விஜய் சேதுபதி அவர்களுக்கு ஒரு பாடம் எடுத்து எல்லோருக்குள்ளும் வில்லத்தனத்தை ஏற்றிவிட்டு இருக்கிறார். இப்போ உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் நான்தான் உன்னை விட பெரிய வில்லி பாக்குறியா? என்கிற ரேஞ்சிலேயே எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி பதில் என்ன
ஆனால் இந்த வார எபிசோடில் விஜய் சேதுபதி என்ன பஞ்சாயத்து செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வாரம் போன வாரம் சொன்னது போல சொல்ல முடியாது என்பதற்காக அன்பு தான் எல்லாம்.. அன்பாக சொல்லுங்க, விட்டுக்கொடுத்து போங்க என்று அட்வைஸ் பண்ணுகிறாரா? இல்லை இந்த வாரமும் எனக்கு வில்லன் ரோல் தான் பிடிக்கும் அதுல தான் ஒரு போதை இருக்கு என்று போனவாரம் பேசுனது போல இந்த வாரமும் பேசப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே போனவாரம் எபிசோட்டில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது இன்னும் பஞ்சாயத்தாக வெடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதற்கு விளக்கம் கொடுக்கப் போகிறாரா? அல்லது அதையெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன் என்று விட்டு விட்டு இந்த வார சண்டைக்கு மட்டும் தீர்ப்பு சொல்லப் போகிறாரா? என்று பொறுத்திருந்து இருந்து பார்ப்போம். இன்று நடந்த பிக் பாஸ் சண்டை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?


Click it and Unblock the Notifications
