'தோற்றாலும்..ஜெயிச்சாலும்..மாஸ்' தான்..ஸ்ருஷ்டியின் கலக்கலான மாஸ் கெட்டப்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஸ்ருஷ்டி டாங்கே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒர்க்கவுட் வீடியோ தான் செம வைரலாக பரவி வருகிறது.
சர்வைவர் நிகழ்ச்சியில்..நீங்கள் பார்த்தது கொஞ்சம்..தான்..ஆனா அங்க நடப்பது ரொம்பவே கஷ்டம்தான் என்று தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.
இவர் நிகழ்ச்சியில் ஜெயிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதினை ஜெயித்துவிட்டார்.

கன்னக்குழி அழகி
தன்னுடைய விடாமுயற்சியினால் ஒவ்வொரு முறையும் இவர் தன்னால் முடிந்தவரை போராடியதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவருக்கு சினிமாக்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் இவருடைய சிரித்த முகத்தை பார்த்து பலர் செல்லரித்து விட்டார்களாம். அதனாலேயே இவருடைய எலிமினேஷன் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிக் காட்டுவார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் இவர் போட்டிகளில் தோல்வி ஏற்றது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் இருந்திருக்கிறது.

உருகும் ஸ்ருஷ்டி
இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியிடப்பட்ட பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் தனக்கு இதுநாள் வரைக்கும் ஆதரவு தந்த தமிழ் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் தெரிவித்திருக்கிறார். அதில் "டார்லிங்ஸ் நான் குட்பை சொல்வதை வெறுக்கிறேன்". சர்வைவர் நிகழ்ச்சி ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோ வாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால் நீங்கள் டிவியில் பார்ப்பது ஒரு சிறிய பிட் கூட இல்லை அங்கு நிறைய நடக்கிறது. அதையெல்லாம் உங்களிடம் காட்டுவது இல்லை ஒரு சில விஷயங்களை மட்டும்தான் வெளியே காட்டுகிறார்கள். அங்கே வாழ்வது அவ்வளவு ஈஸியான காரியம் ஒன்றும் கிடையாது என்று தன்னுடைய அனுபவத்தை தனக்கே உரிய அந்த சிரிப்போடு கூறியிருக்கிறார்.

இந்த மனசுக்கு நல்லதே நடக்கும்
ஒரு பழமையான வாழ்க்கைமுறையை வாழ்வது என்பது எளிதான காரியமல்ல. தற்போது விளையாட்டில் இருக்கும் அவருடைய சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார். அது எதற்காக என்றால் இந்த நிகழ்ச்சி அவ்வளவு எளிமையானது அல்ல. இரக்கமற்ற மற்றும் கடினமான நிகழ்ச்சி இவ்வளவு நாளா மிகவும் வசதியான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் திடீரென்று பழமையான வாழ்க்கைக்கு மாறும்போது உடலையும் மனதையும் கடுமையாக பாதிக்கிறது. கூடுதலாக குடும்பத்தை விட்டுவிட்டு தனிமைப்படுத்தப்பட்டு உங்களுக்கு தெரியாத நபர்களுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் கடினமாக தான் இருக்கும் அதற்காகத்தான் என்று கூறியிருக்கிறார். தன்னை வெளியேற்றினாலும் தன்னுடன் இருந்தவர்கள் வெற்றி பெற்றுவிட்டு வெளியே வர வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.

அனுபவம் பெருசுதான்
தோல்வி என்பது உண்மையில் தோல்வி கிடையாது அது நமக்கு அனுபவம் என்று சின்ன வயதிலேயே படித்திருப்போம் அதே மாதிரிதான் இப்ப நான் உணர்கிறேன். நான் சர்வைவரில் இருந்து வெளியே வந்ததை கூட ஒரு தோல்வியாக உணரவில்லை. உங்கள் அனைவருடனும் அதற்காக ஒரு பாலமாக நான் இதைப் பார்க்கிறேன் என்று ரசிகர்களை பற்றி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி மூலமாக தனக்கு கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று உணர்ச்சி பெருக்கெடுத்து இவர் பேசிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் நமது உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இவரை பின்தொடரும் ரசிகர்களும் எந்த சூழ்நிலையிலும் இந்த மாதிரி தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications