அடைமொழி பெயரில் இசைவாணியை வம்பிழுக்கும் அபிஷேக்...வாய் சும்மாவே இருக்காதா புலம்பும் ரசிகர்கள்
சென்னை: பிரச்சனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் அபிஷேக்.
இவர் சும்மா இருந்தாலும் இவருடைய வாய் சும்மா இருப்பது இல்லை போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரிவ்யூவை தொடங்கிய இவர் தற்போது அடைமொழி பெயரில் அனைவரையும் பாடாய் படுத்த தொடங்கிவிட்டார்.

வலைத்தள கருத்து
பொதுவாக ஒரு சிலர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோணும். ஆனால் ஒரு சிலர் பேசினால் எப்படா முடிப்பார்கள் என்று தோன்றும் அந்த மாதிரி தான் தற்போது அபிஷேக் பேசுவது ரசிகர்களுக்கு இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் பரவலான கருத்துக்கள் பரவி வருகிறது. இவர் ஏற்கனவே யூடியூப் சேனல் மூலமாக தன்னுடைய வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் பலரையும் வம்புக்கு இழுத்து பிரச்சனையை விலை கொடுத்துக் வாங்கி கொண்டிருந்த இவர் இப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

போட்டியாளர்களின் திறமை
இதுவரைக்கும் ஒளிபரப்பான சீசன்களில எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்து மொத்தமாக வந்திருக்கும் போட்டியாளர்களில் நான் அவர்களை எல்லாம் விடவும் ஒரு படி மேல் என இவர் இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றும், என் நான் என்ன பேசினாலும் கேமரா என்னை கவர் செய்ய வேண்டும் என்பதிலேயே கவனமாக அபிஷேக் இருந்து வருகிறார் என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரசிகர்கள் இவரை பற்றி பலவிதமான கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கும்போது இவர் செய்யும் செயல்கள் எல்லாமே அப்படி தான் இருக்கிறது என்று அவருடைய சக போட்டியாளர்களும் நிரூபத்து வருகின்றனர்.

செம சாமர்த்தியம்
ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பதால் தன்னுடைய வயது மூத்தவர் களையும் மரியாதை இல்லாமல் வா போ என்று பேசுவது ஒருபுறம், ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தாலும் மறுபுறம் அவருடைய போட்டியாளர்களை ஐஸ் வைத்தே இவர் மீது கோபம் வராத வகையில் செய்து விடுகிறார். இவர் பேசுவதை பிடிக்கவில்லை என்று எந்த போட்டியாளர் யாராவது குரலை உயர்த்தினால் உடனே அவர்களை சென்டிமென்ட்டாக அட்டாக் செய்து அந்த கதையை அதோடு முடித்து விடுகிறார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் அம்மா, அக்கா, அண்ணா என்று உறவு முறையும் கூறி தன்னை யாரும் தப்பாக நினைத்து விடாதபடி சாமர்த்தியமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அடைமொழியால் ஆபத்து
இன்றைய நிகழ்ச்சி காண ப்ரோமோ 3 வெளியாகி இருக்கிறது, ஆனால் அனைத்தையுமே இவருடைய முகம் தெளிவாக இருக்கிறது. இவர் செய்யும் செயல்களை மட்டும்தான் ப்ரோமோவாக வெளியிடுகிறார்கள் அல்லது கேமராவுக்கு கண்டன்ட் கொடுக்கும் விதமாக இவர் நடந்துகொண்டு இருக்கிறாரா??என்று ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் மூன்றாவது ப்ரோவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் அடைமொழி பெயர் வைத்து அல்சாட்யம் பண்ணி கொண்டிருக்கிறார். முதலில் அண்ணாச்சிக்கு பாவம்- பாவனி, நிரூப்-நெருப்பு, அசால்ட்- அக்ஷரா, தலைவி- தாமரை, வைவ்வால்- வருண், இம்சை- இசை என்று வரிசை கட்டிக் கொண்டு அடைமொழி வாசித்து வருகிறார். ஆனால் இதைக் கேட்டதும் இசைவாணி காண்டாகி இருக்கிறார். என்னை பார்த்தால் எப்படி இருக்கிறது உங்கள் எல்லாருக்கும் என்று அவர் கோபமாக வரும் போது ,இவர் சிரித்துக் கொண்டே அதை சமாளிக்கும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications