உன் வீட்டில் முட்டை இருக்காது..பிரிட்ஜில் இருக்கும் எடுத்துவா..இசையை அவமானப்படுத்திய அபிஷேக்
சென்னை: அடுத்தவர்களை கலாய்க்கிறேன் என்று என்ன வேணாலும் பேசலாமா என அபிஷேக்கிற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
அபிஷேக், இசைவாணியை பற்றி பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
தான் கஷ்டப்பட்டு தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறேன் என்று கூறிய அபிஷேக் அதே போல இருக்கும் இசையை இந்த மாதிரி வார்த்தை எல்லாம் கூறலாமா என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கமெண்டுகளை கொளுத்தி வருகின்றனர்.

நெகட்டிவ் கமெண்ட்களால் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் என்னும் ஒரு பெயரை கேட்டதுமே சமூக வலைத்தள ரசிகர்கள் அனைவரும் கொதித்தெழுந்து வருகின்றனர். காரணம் அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு பலருக்கும் செட் ஆகவில்லை என்று கூறி வருகின்றனர். எப்போதுமே எல்லாமே தனக்கு மட்டும்தான் தெரியும் என்ற ஒரு ஆக்டிவிட்டி அதிகமாக இருப்பதால் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் உருவாகி விட்டனர். இவர் சொல்லும் கருத்துகளை கலாய்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இவருடைய யூடியூப் சேனலை தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருக்கிறது.

யூடியூபர் அபிஷேக்
யூடியூப் சேனலை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் இவருடைய கேரக்டர் மாறவே இல்லை அதே போலத்தான் இருந்து கொண்டிருக்கிறார் என்று பலர் இவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருவரை நன்றாக திட்டி நோஸ்கட் செய்து விட்டு அவரிடம் கடைசியாக உறவுகள் பெயரில் பாசமாக இருப்பது போல பூசி மொழுகி விடுகிறார் என்று பலருக்கும் இவர் மீது வருத்தத்தை கொடுத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான நாளிலிருந்து அதிகமான கமெண்ட்கள் இவர் எப்போது இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என்று தான் பலர் கேட்டு வருகின்றனர்.

இந்த வாரம் தாக்கு பிடிப்பாரா
ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி இந்த வாரம் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை இது பலருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், ஒருசில இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவர் அப்படி என்ன செய்துவிட்டார் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கும் விதமாகத்தான் விளையாடி வருகிறார். இவர் மீது எதற்கு சிலருக்கு இந்த மாதிரி வன்மம் என்று பலர் இவரை கலாய்த்த நெட்டிசன்கள் மீது கோபப்பட்டும் வருகின்றனர்.
ஆனால் பெருகி வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பார்க்கும்போது இவர் இந்த வாரம் தாக்கு பிடிப்பாரா என்று தான் பலருக்கும்
நினைக்கத் தோன்றுகிறது.
Recommended Video

இப்படி பேசலாமா
ஆனால் முதல் வாரத்தில் இவர் தப்பித்து விட்டாலும் இரண்டாவது வாரத்தில் எப்படியும் வெளியேறி விடுவார் என்று இவருடைய தீவிரமான நெகட்டிவர்ஸ் கூறி வருகின்றனர். காரணம் இவர் தன்னுடைய சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசிக்கொண்டிருப்பது. அது மட்டுமல்லாமல், தற்போது இவருக்கும் இசைவாணிக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையும் என்று கூறி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளிலிருந்து இவரை அபிஷேக் தங்கச்சி என்றும், புளிமூட்டை, கொத்தமல்லி மண்டை, லாலி பப்பு அப்படி பல பெயர்களில் கலாய்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் இசைவாணி இடம் முட்டை இருக்கிறதா?? என்று கேட்டிருக்கிறார் அதற்கு இசைவாணி இல்லை என்று கூறவும் உன் வீட்டில் இல்லை என்று எனக்கு தெரியும் ஃப்ரிட்ஜில் இருக்கு எடுத்துட்டு வா என்று கூறியிருக்கிறார்.

முட்டைக்கு அக்கப்போரா
இசை வாணியின் வறுமைநிலை அனைவருக்குமே தெரிந்ததுதான். இவர் ஆரம்ப கட்டத்தில் இருந்து எவ்வளவு கஷ்டங்களையும் துயரங்களையும் கடந்து தான் இன்றைய இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார். ஆனால், அவருடைய வீட்டில் இன்னமும் கூட ஒரு பெரிய டிவி இல்லை பல அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லை என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதை மையமாக கொண்டுதான் அபிஷேக் இந்த ஒரு வார்த்தையை கூறினாரா??என்று அபிஷேக் மீது சந்தேகப்பட்டு கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு வார்த்தை பலருடைய மன கசப்புக்கு ஆளாக்கி இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications