Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் பதவி...அப்போ கமலைக் கலாய்த்த அபிஷேக்... இப்போ அதே பிக்பாஸில்... கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அது வேற வாய் இது வேற வாய் என்று நெட்டிசன்கள் வாயில் விழுந்திருக்கும் அபிஷேக்கின் பழைய வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசலாமா என்று தற்போது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் எப்போதுமே போட்டியாளர்களை பற்றி பல சுவாரசியங்கள் வெளியே வரும், அதே போல தற்போது அபிஷேக் எப்போவோ பேசிய வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அப்போ எல்லாம் பொய்யா கோபால்! !!

அப்போ எல்லாம் பொய்யா கோபால்! !!

இளைஞர்களை கவர்வதற்காக நடிகைகளாக இருந்தாலும் சரி பட்டிமன்றப் போட்டியாளர்களாக இருந்தாலும் சரி கையில் மைக் கிடைத்துவிட்டால் கண்டதையும் பேசிவிடுகிறார்கள். அதற்குப் பின் விளைவு தெரியாமல் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிற்காலத்திலோ அல்லது உடனுக்குடனோ பிரச்சனையை கிளப்பி விடும். ஒரு சில வீடியோக்கள் உடனே பாப்புலர் ஆகி விடும். ஆனால் ஒரு சில வீடியோக்கள் பொறுமையாக இருந்து பூகம்பமாக வெடித்துவிடும். அந்த மாதிரி தான் தற்போது ஒரு வீடியோ அனைவரின் கண்களுக்கும் கலவரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் அதிகரிப்பு

ரசிகர்கள் அதிகரிப்பு

விஜய் டிவியில் புதியது புதியதாக ரியாலிட்டி ஷோக்கள் பல தொடங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சேனலை பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைய வைத்துவிட்டது. அதுவும் இளைஞர்களையும் சின்னத்திரை பக்கம் கவர்ந்து இழுத்து இருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி சும்மா இருந்தாலும் ரசிகர்கள் இருக்க விடாமல் எப்போது தொடங்குவார்கள் என்று ஆவலாக கேட்டு வருகின்றனர்.

பிக் பாஸை விளாசிய அபிஷேக்

பிக் பாஸை விளாசிய அபிஷேக்

ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தாலும், நெட்டிசன்கள் ஒரு பக்கம் தங்களால் எந்த அளவிற்கு கலாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு கலாய்த்து வருகின்றனர். அதில் இளைஞர்களாக இருந்தாலும் சரி, ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்களாக இருந்தாலும் சரி நாங்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று அனைவரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்களாக கொட்டி வருகின்றனர். அதில் ஒரு இளைஞராக தான் அபிஷேக் ஒரு காலத்தில் இதே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி மேடை ஒன்றில் அனல் பறக்க பேசியிருக்கிறார். அவர் பேசிய பேச்சை கேட்டதும் இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து இருக்கின்றனர்.

Recommended Video

    Bigg Boss 5 Contestants-ன் கடைசி வீடியோ | Akshara, Imman, Abhinay
    அப்படி என்ன ஜென்ரேஷன்

    அப்படி என்ன ஜென்ரேஷன்

    மேடையில் பேசுவது எல்லாம் ஊருக்கு தானே தவிர நமக்கு கிடையாது என்று கவுண்டமணி ஒரு படத்தில் காமெடியாக சொல்லி இருப்பார். அதே விஷயத்தை தற்போது அபிஷேக் செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை வைத்து கலாய்த்து பாடாய் படுத்தி வருகின்றனர். கல்லூரி விழா ஒன்றில் பேசிய அபிஷேக் நாங்க எல்லாம் வேற மாதிரி ஜென்ரேஷன் என தொடங்கி கண்ணால் பார்ப்பதையே நம்பமுடியாமல் இருக்கிறோம் என வேர்க்க விறுவிறுக்க கூறியிருக்கிறார்.

    என்ன வார்த்தை சொல்லிட்டீங்க

    என்ன வார்த்தை சொல்லிட்டீங்க

    அப்படி என்னதான் இவர் நம்பாமல் இருக்கிறார் என்று யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடம் "ஊருக்கே தெரியும் டா உங்களை சுற்றி கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க என்று...ஆனா கெடச்ச அந்த 100 நாளுக்குள்ளே நீ தமிழ்நாடு சிஎம் ஆகனும்....என்று பண்ற வேலையெல்லாம் இருக்குல..முடியலடா!!..கேட்டா பிக் பாஸ் என்று சொல்லுவீ ங்க" என்று இவர் பேசிய வீடியோ தான் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கமலஹாசனை இப்படி ஒருமையில் திட்டி தீர்த்த அதே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களால் முடிந்ததை செய்து இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+