“இனி அந்த பொண்ணை தான் திருமணம் செய்யப் போகிறேன்” அர்னாவ் அனுப்பிய குறுஞ்செய்தி!! வெளியான ஆதாரங்கள்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா தன்னுடைய கணவர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய கணவரான அர்னாவ் வேறு ஒரு நடிகையுடன் பழகி வருவதாக கூறியிருந்த திவ்யா தற்போது அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்.
திவ்யாவிடம் அவருடைய கணவரான அர்னாவ் தான் இனி அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய போகிறேன் என்று அனுப்பிய குறுஞ்செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை
ஐந்து வருடங்களாக ஒற்றுமையாக காதல் வாழ்க்கையை வாழ்ந்து வந்த சின்னத்திரை தம்பதிகளான திவ்யா மற்றும் அர்னாவ் தற்போது திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே திவ்யா தன்னுடைய கணவர் அர்னாவ் உடன் நடிக்கும் சீரியல் நடிகை உடன் நெருக்கமாக பழகி வருகிறார்.அதனால் தான் தன்னை கண்டுக்கவே மாட்டேன் என்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னை பிளாக் பண்ணி விட்டார் என்று கூறி வந்தார்.

இதில் எது உண்மை
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தன்னுடைய கணவரான அர்னாவ் கண்ணை அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் கர்ப்பமாக இருக்கும் தனக்கு வயிறு வலி வந்து ஹாஸ்பிடல் செல்லும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தன் மீது தப்பில்லை எல்லாவற்றிக்கும் காரணம் திவ்யா தான் என்று அர்னாவ் செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் தன்னிடம் திவ்யாவை பற்றி பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்தான் தன்னை ஏமாற்றி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

குழப்பராங்களே பாஸ்
தானும் தன்னோடு நடிக்கும் சீரியல் நடிகை யும் நட்பாக மட்டும் தான் நாங்கள் பழகி வருகிறோம். ஆனால் அதை திவ்யா தவறாக பார்த்து வருகிறார். திவ்யாவும் சீரியலில் நடிக்கும் போது அவரோடு நடிக்கும் நடிகர்களுடன் பழகி வருகிறார். ஆனால் நான் அப்படி எப்போதும் நினைத்ததே இல்லை என்று அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். இந்த நிலையில் அர்னாவ் பேசுவது அனைத்துமே பொய் அவரோடு நடிக்கும் நடிகையை திருமணம் செய்வதாக தனக்கு இன்ஸ்டாகிராமின் மெசேஜ் பண்ணி இருந்தார் என்று தற்போது திவ்யாவின் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு இருக்கிறார்

வெளியான ஆதாரம்
அதில் அர்னவ் புகைப்படம் வைத்த ஐடியில் இருந்து, "நான் உனக்கு ஒரு புகைப்படம் அனுப்பி இருக்கிறேன் பாரு என்று கூறியிருக்கிறார். நானும் அவளும் என்று திவ்யாவிடம் சாட் செய்து இருக்கிறார். அதற்கு திவ்யாவும் பார்க்கலாம் என்று திருப்பி பதில் அளித்திருக்கிறார். இனி லிப் கிஸ் எல்லாம் வரும் என்று அடுத்ததாக அனுப்பி இருக்கிறார். அதைத்தொடர்ந்து, கண்டிப்பா செய்வேன் பாரு, அண்ட் ஐ வில் மேரி ஹெர் ஆல்சோ. அதுவும் பாரு அவ கூட வாழுவேன். அதையும் பாரு, எல்லாமே உன்னால இனிமே பார்க்க மட்டும் தான் முடியும் திவ்யா" என்று அந்த ஸ்கிரீன்ஷாட் இல் இருக்கிறது இதை அர்னவ் தனக்கு சாட் செய்ததாக கூறி திவ்யா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications