அட்ஜஸ்மெண்டுக்கு NO..NO.. பிரபல "நடிகையை” புகழ்ந்து தள்ளிய பயில்வான்.. இதுதான் காரணமாமே..!?
சென்னை: நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் பலரை பற்றி பல தகவல்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் முதல் முறையாக வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்த நடிகை ஒருவரை பற்றி பாசிட்டிவாக பேசியிருக்கிறார். இது பலருக்கும் வியப்பாக இருக்கிறது.

அது வேறு யாருமில்லை நடிகை சுவலட்சுமி தான். இவர் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தாலும் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான "ஆசை" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுவலட்சுமி அதைத் தொடர்ந்து விஜய், அஜித் என பல நடிகர்களோடு பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப பாங்கான இவருடைய கேரக்டர் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவருடைய முகமும் ரசிகர்களின் மத்தியில் பரீட்சையம் ஆகிவிட்டது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்ததால் வரிசை கட்டிக்கொண்டு இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இந்த நிலையில் திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் "வேலன்" போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த சுவலட்சுமியில் இப்போது அதிகமாக எந்த திரைப்படங்களிலும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சுவலட்சுமி குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை கூறியிருக்கிறார். அவர் சமீபகாலமாகவே பல நடிகைகள், நடிகர்கள் பற்றி சர்ச்சை செய்திகளை பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சுவலட்சுமி குறித்து பல பாசிட்டிவ் விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது சுவலட்சுமி எந்த காரணத்திற்காகவும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கறாராக சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளாராம். மேலும் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திர படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சி அல்லது படத்தில் சில அச்சஸ்மெண்ட் கட்டாயம் இருக்கும் என்று அவர்களோடு நடிக்க மறுத்தும் இருக்கிறாராம்.
அது மட்டுமல்லாமல் பல நடிகர்களோடு பல நடிகைகள் கிசுகிசுப்புகளில் சிக்கி இருக்கும் வேளையில் இவர் மட்டும்தான் எந்த நடிகை ஹீரோக்களோடு காதல் சர்ச்சையில் சிக்கவில்லை என்று சுவலட்சுமி குறித்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications