ப்ரீத்தி பற்றி பரவி வரும் செய்தி.. மனம் திறந்து விளக்கம் கொடுத்த கிஷோர்.. இதுதான் பிரச்சனையாம்!?
சென்னை: சின்னத்திரை நடிகை ப்ரீத்தி பசங்க திரைப்பட நடிகர் கிஷோரை காதலிக்கும் செய்தி சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தனர்.
கிஷோரை விட ப்ரீத்தி நான்கு வயது அதிகமானவர் என்ற செய்திகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தங்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி முதல் முறையாக கிஷோர் பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை
சின்னத்திரை நடிகை ப்ரீத்தி குமார் தன்னுடைய பிறந்தநாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் காதலிக்கும் நபரை பற்றி ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி தான் கிடைத்தது. காரணம் அவர் பசங்க திரைப்படத்தில் அன்புக்கரசுவாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட கிஷோர் தான். ப்ரீத்திகுமார், ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்கள் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெளிவந்த ரகசியம்
இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படத்தின் மூலமாக நடிக்க வந்து பல விருதுகளை பெற்றிருந்த கிஷோர், சமீபத்தில் தான் 13 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரும் நடிகை ப்ரீத்தி குமாரும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் சில வருடங்களாக நடைபெற்று வந்தாலும் அதை குறித்து எந்த தகவலையும் வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கின்றனர். முதல் முறையாக ப்ரீத்தி பிறந்த நாளில் ப்ரீத்தியை பற்றி உருக்கமாக கேப்ஷன் கொடுத்து கிஷோர் ப்ரீத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு பிறகு தான் இவருடைய காதல் ரகசியம் பலருக்கும் தெரிந்தது.

வயது வித்தியாசம்
ப்ரீத்தியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிஷோர் பற்றி உருக்கமாக பல தகவல்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்தாலும் அந்த அளவிற்கு யாருக்கும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்து வந்தது. ஆனால் இவர்களுடைய திடீர் அறிவிப்பு பலரையும் திக்கும் முக்காட வைத்துவிட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய காதல் பற்றி தான் பலரும் பேசி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். குறிப்பாக ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது அதிகம் என்ற செய்திகள் பரவி வருகிறது.

கிஷோர் கொடுத்த விளக்கம்
இப்படி ஒரு நிலையில் கிஷோரை விட பிரீத்தி நான்கு வயது அதிகமானவர் என்ற விமர்சனத்திற்கு கிஷோர் எனக்கு வயது பற்றி எல்லாம் எதுவும் பிரச்சனை கிடையாது. முக்கியமாக என்னுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது. இப்படி கமெண்ட் போடுபவர்களை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். ஆனால் அவள் பார்ப்பாள். ஆனால் அதை எல்லாம் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுவார் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications