குணசேகரன் ஆக நடிப்பதால் நிஜ வாழ்க்கையில் சந்தித்தது.... உருக்கமாக கூறிய மாரிமுத்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து தன்னுடைய நிஜ வாழ்க்கையில் தனக்கு நடக்கும் நிகழ்வுகளை பற்றி கூறியிருக்கிறார்.
சீரியலில் மிரட்டும் கதாபாத்திரமாக நடிப்பதால் நிஜத்திலும் இப்படித்தான் இருப்பார் என்று ரசிகர்கள் முத்திரை குத்தி விடுகிறார்கள் என்று வருத்தமாக மாரிமுத்து கூறியிருக்கிறார்.

திருச்செல்வம் படைப்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திருசெல்வம் இந்த சீரியலை இயக்கி உள்ளார். திருச்செல்வம் இயக்கம் என்றாலே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பை தொடங்கி விடுகிறார்கள். ஒரு இயக்குனராக ரசிகர்களின் ரசனை அறிந்து சீரியலை எடுப்பது இவருக்கு நிகர் இவர்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போதைய எதிர்நீச்சல் சீரியலும் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சீரியலுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு நடிகர்களையும் தேர்வு செய்துள்ளாராம்.

சூடு பிடித்த கதைக்களம்
குடும்பத்தின் மூத்த அண்ணனாகவும் சீரியலின் வில்லனாகவும் மிரட்டும் கதாபாத்திரத்தில் கடுகடுவென இருக்கும் குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்து வருகிறார். கேரக்டர் செலக்ட் செய்தால் இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது மாரிமுத்து அனைவரையும் மிரட்டி வருகிறார். இந்த சீரியலில் தற்போது கதைக்களம் சூடு பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் அவ்வளவாக எதிர்த்து பேசாமல் அமைதியாகவே இருந்து வந்த ஜனனி தற்போது குணசேகரன் நடுத்தெருவில் வைத்து எதிர்த்துப் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இருந்து வருவதாக கூறி வருகிறார்கள்.

நடிப்பு திறமை
சீரியலில் கடுகடுவென இருக்கும் மாரிமுத்து நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் இல்லை. ரொம்பவே சகஜமாகவும் ஜாலியான கேரக்டராக தான் இருந்து வருகிறார் என்று அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூறியிருக்கின்றனர். அதுபோலத்தான் இவர் சக நடிகர்களுடன் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும். ஜாலியாக இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை பார்த்து பலர் இப்படிப்பட்ட மனுசரா அப்படியெல்லாம் நடிக்கிறார் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திரைப்படங்களில நடித்த அனுபவமா..!! இவருக்கு இப்படி பின்னி பெடல் எடுக்கிறார் என்று இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரியல் லைஃப் சோதனை
சீரியலில் குணசேகரன் ஆக அனைவரையும் மிரட்டும் கதாபாத்திரத்தில் தான் நடிப்பதால் ரசிகர்கள் பலர் நிஜத்திலும் இவர் இப்படித்தான் என்று எனக்கு முத்திரை குத்தி விட்டார்கள் போல, ஒரு திருமண விழாவில் நான் சென்றிருந்தபோது ஒரு பெண் நேராக என்னிடம் வந்து விட்டார்.டக்கென்று என்னைப் பார்த்ததும் ஐயோ இவரா?? என்று வந்த வழியே விறுவிறுவென ஓடிவிட்டார். இதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது என்று ஒரு பேட்டியில் மாரிமுத்து கூறியிருக்கிறார். நடிகர்கள் பொதுவாக என்ன மாதிரி கேரக்டரில் நடிக்கிறார்களோ அவர்கள் அப்படித்தான் என்று நம்புபவர்கள் எம்ஜிஆர் காலம் தொடங்கி இப்ப வரைக்கும் இருந்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications