எதிர்நீச்சல் குணசேகரன் நிஜ வாழ்க்கையில் தெரியாத மறுபக்கம்... அட இவருக்குள் இப்படியா. !!??
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக பலரையும் மிரட்டிக்கொண்டிருக்கும் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கையை பற்றி அவரே மனம் திறந்து பேசியுள்ளார்.
சீரியலில் கடுகடுவென இவரை பார்த்து பழகிய பலரும் நிஜத்திலும் இவர் இப்படித்தான் இருப்பார் என்று இவருக்கு முத்திரை குத்தி இருக்கிறார்கள்.
சொந்த வாழ்க்கையில் மாரிமுத்து பாதி குணசேகரன் ஆகவும் பாதி குணசேகரன் இல்லாத மாரிமுத்தாகவும் இருந்து வருவதாக கலகலப்பாக கூறியிருக்கிறார்.

மிரட்டும் குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது அதுவும் கடந்த சில நாட்களில் இந்த சீரியலை பலரும் அதிகமாக எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர். ஆரம்பமான புதியதில் இருந்தே இந்த சீரியல் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தாலும் இந்த வார எபிசோடுகள் வேற லெவல் என்று சீரியலின் தீவிரமான ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சீரியலின் வெற்றிக்கு இயக்குனர் ஒரு பக்கம் காரணம் என்று சொன்னால் இதில் நடிகராகவும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கும் குணசேகரன் கேரக்டர் மிக முக்கியம் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

ரசிகர்களின் சந்தேகங்கள்
குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் மாரிமுத்து ஏற்கனவே பல திரைப்படங்களிலும் பல்வேறு கேரக்டரில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி மிரட்டி இருக்கிறார். இவ்வளவு நாட்களாக சினிமாக்களில் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது முதல் முறையாக சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். எடுத்து வைத்த முதல் சீரியலில் இப்படி ஒரு கேரக்டர் இவருக்கு அமையும் என்று இவரே எதிர்பார்த்தாரோ என்னவோ அந்த அளவிற்கு அவருடைய கேரக்டரில் கன்னாபின்னா வென புகுந்து விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மாரிமுத்து அப்படியே கேரக்டராக மாறி விளையாடி வருகிறதை பார்த்த ரசிகர்கள் பலர் இவர் நிஜ கேரக்டரே இப்படித்தான் இருக்குமோ என்று சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்னொரு முகம்
மாரிமுத்து தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் குணசேகரன் கேரக்டரில் 50% அப்படியே தான் இருப்பாராம். நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப பர்பெக்சன் பார்ப்பாராம். சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப அலட்டிக்குவாராம் உதாரணமாக திடீரென்று இவருடைய கார், பைக் ஏதாவது ஒன்று மெக்கானிக் செட்டில் விட வேண்டிய நிலைமை வந்தால் கூட அங்கேயே இருந்து நிதானமாக சரி செய்து வாங்கிக் கொண்டுதான் வருவாராம். முழு நாள் இருக்க வேண்டும் என்றாலும் அசராமல் அங்கேயே இருந்து வேலையை முடித்து வாங்கிக் கொண்டுதான் வருவாராம். அவருடைய பொருள்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பாராம். மெக்கானிக் செட்டில் இருந்து மெக்கானிக் வேலை செய்து கொண்டு இருந்தாலும் அதில் சரியாக செஞ்சி இருப்பாரா என்று இவரும் செக் செய்து பார்த்தால் தான் இவருக்கு திருப்தியாக இருக்குமாம்.

இது வியப்பாகத்தான் இருக்கிறது
சீரியலில் மட்டும் தான் மாரிமுத்து குணசேகரன் இப்படி என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு சிலருக்கு இவருடைய இந்த வார்த்தைகள் அதிர்ச்சியைத் தான் கொடுத்திருக்கிறதாம். மாரிமுத்து தன்னுடைய மனதுக்குள் அம்பியும் அந்நியனும் இருப்பதாக கூறி இருக்கிறார். எப்போது யார் எட்டிப் பார்ப்பார்கள் என்று தெரியாது என்றும் கூறியிருக்கிறார். எனக்கு என்று ஒரு வியூ வைத்திருக்கிறேன். அதுபடி தான் செய்யணும். ஒரு வேலை எடுத்துக்கிட்டா அதில் இன்வால்வோடு செய்து முடிக்க வேண்டும். போல்டா செய்யணும் அதிலிருந்து பின் வாங்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார். நடிகர் மாரிமுத்துவிற்குள் ஆதிசேகரன் பாதி அளவு தான் இருக்கிறாராம். சூட்டிங் முடிந்ததும் சக நடிகர்களோடு ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து ஆட்டம் போட்டு ஜாலியாக என்ஜாய் செய்து விடுவாராம். பல நேரங்களில் சமூக வலைத்தளத்தில் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகள் வீடியோக்களை சக நடிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications