என் மனைவி பற்றி நான் தப்பா பேசல.. குடும்பத்தில் பிரச்சனை! மகள் வருத்தப்படுறாங்க! பார்த்திபன் எமோஷனல்
சென்னை: நடிகர் பார்த்திபன் சமீபத்தில் தன்னுடைய டீன்ஸ் திரைப்பட பட ப்ரொமோஷனுக்காக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் இப்போது தான் பேசிய இரண்டு செய்தியை ஒன்றாக சேர்த்து போட்டதால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் ஒரு ட்ரெண்டிங் உருவாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியாக போகிறது என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தொடர்ச்சியாக பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் தங்களுடைய சினிமா வாழ்க்கை குடும்ப வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பார்த்திபன் டீன்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பல சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.

அப்போது பார்த்திபனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. அதிலும் அதிகமான சேனல்களில் அவருடைய முன்னாள் மனைவி சீதா குறித்து கேட்க, அதற்கு பார்த்திபனும் தன்னுடைய காதல் அனுபவங்கள் மற்றும் பிரிவின் வலி குறித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே சீதாவும் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பிறகு எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் பழைய மகிழ்ச்சியான நினைவுகளை மட்டுமே பகிர்ந்து வருகிறார்கள்.
அதுபோலத்தான் இப்போதும் பார்த்திபன் பேட்டியில் நான் என்னுடைய காதலை உணர்ந்தது சீதாவிடம் தான். ஆரம்பத்தில் நான் மெச்சூரிட்டி இல்லாமல் எடுத்த முடிவால்தான் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு சுயமரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று பேட்டி ஒன்றில் வருத்தமாக பார்த்திபன் பேசியிருக்கிறார். அதற்கு காரணம் பார்த்திபன் சமீபத்தில் பேசும்போது ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவி குறித்து பேசி இருக்கிறார். அதுபோல இன்னொரு பேட்டியில் அவர் இயக்கிய சொர்ணமுகி படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். ஆனால் சேனல் ஒன்றில் இரண்டையும் ஒன்றாக்கி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த சீதா தன்னுடைய மகளிடம் வருத்தப்பட்டாராம்.
பார்த்திபனின் மகள் பார்த்திபனுக்கு மெசேஜ் செய்து என்னப்பா அம்மா பத்தி எதுவும் தப்பா பேசி இருக்கீங்களா? என்று கேட்க, இல்லம்மா நான் எதுவும் பேசல... நான் பேசுனது அவங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தா சாரி சொல்லிரு.. என்று சொல்லி நான் இரண்டு செய்தியில் பேசியதை ஒன்றாக சேர்த்து போட்டுட்டாங்க அவ்வளவுதான் என்று சொன்னேன்.
நான் எப்போதுமே மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுவேன். இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது இப்போது கூட இதுதான் எனக்கு வந்த சிக்கலாக இருக்கிறது என்று பார்த்திபன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு தன்னுடைய முன்னாள் மனைவி குறித்தும் பேசி இருக்கிறார். அதில் நான் என்னுடைய பழைய காதல் அல்லது யாரையாவது பற்றி பேசினாலே அவர்களுடைய மனது புண்படக் கூடாது என்று பார்த்து பேசுவேன்.
ஆனால் என்னில் பாதியாக இருக்கும், இப்போதும் என்னுடைய குழந்தைகளின் அம்மாவாக இருப்பவரை நான் மனசு கஷ்டப்படுத்துவேனா? ஆனால் சிலர் நாம் ஒன்று பேச என்னொன்றாக வெளியிடுவதால் மனக்கசப்புகள் குடும்பத்திற்குள் வந்து விடுகிறது என்று பார்த்திபன் வருத்தப்பட்டு இருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications