Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நண்பர்களால் சரிந்த "நடிகர் சசிகுமார்” குடும்பத்தில் நடந்த தற்கொலை.. இத்தனை சோகமா இவர் வாழ்க்கையில்.?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுப்பிரமணியபுரம் படம் துவங்கி அயோத்தி படம் வரை நடிகர் சசிகுமாரின் பேக் டூ பேக் ஸ்டோரியை,அவருடன் அன்று முதல் இன்று வரை நெருங்கிய தொடர்பில் இருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சசிகுமார் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும்,தன்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்துள்ள நட்பு,துரோகம் போன்றவை குறித்த யாரும் அறிந்திடாத பல தகவல்களை பேசி உள்ள வீடியோ யூடியூப்பில் நல்ல வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

Actor Sasikumar as a director and producer, information about the friendships and betrayals he has gone through in his life

சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று மதுரையில் இருந்து ஒன்றாக பஸ் ஏறியவர்கள் பாலா,அமீர்,சசிகுமார். அவர்களுள் முதலில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற பாலாவின் சேது படத்தில் இருந்து பாலாவிற்கு உதவி இயக்குனராக இருந்து வந்தவர் சசிகுமார். கொடூரமான முகம் கொண்டவராக கருதபடும் இயக்குனர் பாலாவிடம் அதிகமான திட்டுகளை வாங்கிய உதவி இயக்குனர் தாம் தான் என்று சசிகுமார் பல பேட்டியில் கூறியுள்ளார்.
வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சசிகுமார் என்பதால் பொருளாதார ரீதியாக தனியாக படம் இயக்குவது அவருக்கு கடினமான விஷயமாக இருக்கவில்லை.கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த தன் நண்பன் சமுத்திரகனியை மிகவும் அரும்பாடு பட்டு சுப்பிரமணியபுரத்தில் கனகு என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

ஜெய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் அவர் நடிக்க அணுகியது சாந்தனுவை தான். அப்பொழுது தன்னுடைய மகனுக்காக கதையைக் கேட்ட பாக்யராஜ் கதை அந்த அளவிற்கு திருப்திகரமாக இல்லை என்றும் தன்னுடைய மகனுக்கு இது சரியாக இருக்காது என்றும் சொல்லி சாந்தனு சுப்ரமணியபுரம் படத்தில் நடிப்பதற்கு பாக்யராஜ் மறுத்துவிட்டார்.

பின்னாளில் பாக்கியராஜ் பல இடங்களில் அதைக் குறித்து வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்.தான் திரைத்துறையில் பெரிய அனுபவசாலியாகவும் இருந்தாலும் தனக்கும் சில சறுக்கல்கள் வந்திருக்கின்றன என்றும் தன்னால் தான் தன்னுடைய மகன் சுப்பிரமணியபுரம் படத்தை தவறவிட்டதை குறித்து பேசி இருக்கிறார்.80'sகளில் நடக்கும் கதையை ரியாலிட்டிக்காக இருக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு படத்தை எடுத்த சசிகுமார் படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்டையே உருவாக்கினார்.

வட இந்தியாவில் சுப்பிரமணியபுரம் படத்தைப் பார்த்த இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அனுராக்கா காஷ்யப் சுப்பிரமணியபுரம் படம் தன்னை தூங்க விடாமல் செய்யும் அளவிற்கு இம்ப்ரஸ் செய்து விட்டது என்று பிளைட் பிடித்து வந்து சசிக்குமாரை பாராட்டி சென்றார். தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு திரைக்கதை குறித்து பாடம் எடுப்பதற்கு சுப்பிரமணியபுரம் படத்தையே ஒரு நோட்ஸ் ஆக வைத்திருக்கிறாராம் அந்த இயக்குனர்.

சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு நாடோடிகள் சுந்தரபாண்டியன் போன்று பல குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்த சசிகுமார் தங்களின் குருவான பாலு மகேந்திராவின் தலை முறைகள் படத்தை குருவின் ஆசைக்காக தயாரித்து முதல் சறுக்கலை சந்தித்தார். பின்பு தான் அண்ணனாகவும் குருவாகவும் நினைக்கும் பாலாவின் தாரை தப்பட்டை படம் தான் அவரை சினிமா வாழ்க்கையில் மேலிருந்து தர தர என கீழே இழுத்து போட்டது.

மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த அந்த நேரத்தில் கடன் பிரச்சனையால் தன்னுடைய சொந்த மைத்துனரின் தற்கொலையும் அவரை துவளச் செய்துவிட்டது. நீண்ட நாட்கள் மதுரையில் தன்னுடைய வீட்டிலேயே முடங்கி கிடந்த சசிகுமார் பின் மீண்டும் சென்னைக்கு வந்து கடனை அடைப்பதற்காக கதை கேட்காமல் கிடைக்கிற படத்தில் எல்லாம் நடிக்க ஆரம்பித்து பல தோல்வி படங்களை கொடுத்தார்.

பேட்டை படத்தின் ஆடியோ ரிலீஸின் போது கூட ரஜினிகாந்த் சசிகுமார் பற்றி கூறும்போது தான் வாழ்வில் சந்தித்த நல்ல மனிதர்களுள் ஒருவர் சசிகுமார் என்றும், தாடி மீசை வைத்த குழந்தை என்றும் சர்டிபிகேட் கொடுத்திருந்தார்.சசிகுமாரை பற்றி தெரிந்திருந்த ரஜினிகாந்த் சசிகுமார் தயாரிப்பதை விட்டுவிட்டு இன்னும் அதிகமான படங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது அவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமோஷனுக்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்திருந்தால் படம் வேற லெவல் ஹிட் அடித்திருக்கும்.நட்பு நட்பு என்று எந்த நட்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாரோ, அந்த நட்பாலே வீழ்ந்த சசிகுமார் தற்பொழுது நம்பிக்கையான சில நண்பர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொண்டுள்ளாராம். அயோத்தி படம் கொடுத்த தெம்பில் தமிழ் சினிமாவில் சசிகுமார் இன்னொரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+