திருமண நாளை கொண்டாடும் சதீஷ்..வித்தியாசமாக வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்
சென்னை: இரண்டாவது திருமண நாளை சந்தோசமாக அவருடைய மனைவியுடன் கொண்டாடுகிறார் நடிகர் சதீஷ் .
திருமண நாளில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் சதீஷ் நனைந்து வருகிறார்.
காமெடி நடிகர் என்பதால் அவருடைய பாணியிலேயே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் சில நெட்டிசன்கள்.

நகைச்சுவை நடிகரின் ஆரம்பம்
வெள்ளித்திரையில் காமெடி நடிகராக இளம் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் சதீஷ் பலருக்கும் பரிச்சயமான ஒரு நடிகர்தான். இவருடைய டைமிங் காமெடியால் இவரை ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இவர் அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தற்போது தன்னுடைய முயற்சியாலும், உழைப்பாலும் பலருக்கும் பரிச்சயமான நபராக மாறியிருக்கிறார். படிப்பதற்கு கூட வசதி இல்லாமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய அடையாளத்தை அனைவருக்கும் தெரிய வைத்துள்ளார்.

கைகொடுத்த கிரேசி மோகன்
நடிப்பில் ஆர்வம் கொண்ட சதீஷ் இளம் வயதிலே வீட்டிலிருந்த ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட்டு நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார். இவருக்கு 14 வது வயதில் கிரேசி மோகன் குழுவில் இணைந்துள்ளார். இந்த குழுவில் 8 ஆண்டுகள் பகுதிநேரமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கிரேசி மோகன் இவருக்கு படிப்பதற்கு உதவி செய்து இவரை படிக்க வைத்துள்ளார். அதற்கு பிறகு படித்துக்கொண்டே பல நாடகங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் மூலமாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெளிச்சம் தந்த திரைப்படம்
ஏ.எல்.விஜய், சதீஷை பொய் சொல்ல போகிறோம் என்ற படத்திற்கு இணை உரையாடல் எழுத்தாளராக ஆக்கியிருக்கிறார் அதற்கு பிறகு அவருக்கு மதராசப் பட்டினத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அறிமுகமானது ஜெர்ரி திரைப்படத்தில் தான்.ஃபரிக் என்ற சிறிய கதாபாத்திரத்தில் தான் எந்த ஒரு உரையாடலும் இல்லாமல் இரண்டு காட்சிகளில் காட்டப்பட்டுள்ளார். அதற்குப் பிறகு இவருக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் பீட்டர் ஆக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவர் தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டத் தொடங்கியுள்ளார்.

அனைவரும் வாழ்த்திய திருமணம்
சிவகார்த்திகேயனுடன் முதல் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றி காரணமாக மீண்டும் மான்கராத்தே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கத்தி, தங்கமகன், ரெமோ போன்ற பல திரைப்படங்களில் இவர் தன்னுடைய கேரக்டரை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருதையும் பெற்றுள்ளார். அதற்குப் பிறகு சதீஷ் 2019ல் சிந்துவை திருமணம் செய்துள்ளார். இவருடைய திருமணத்திற்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். இந்த தம்பதியினருக்கு நிஹாரிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

வாழ்த்து மழையில் தம்பதியினர்
தற்போது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இன்று இவர் தன்னுடைய திருமண நாளுக்கு இன்ஸ்டாகிராமில் தான் மற்றும் தன்னுடைய மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ஒருசில நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷ் சங்கத்தின் சார்பாகவும் இவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பல ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் இவருடைய திருமண நாளுக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications