சமுத்திரகனியும் நானும் தெருத்தெருவாக அலைந்தோம்..! ஆனால் இப்போ.. வையாபுரி சொன்ன கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் இன்று ஒருவரை பார்க்கும் போது இவருக்கு என்ன கஷ்டம் இருந்திருக்கும் என்று நம்மால் அவ்வளவு எளிதாக யோசிக்க முடியாது. குறிப்பாக பல வருடங்களாக சினிமாவில் இருப்பவர்களை பார்த்தால் ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றுதான் நினைத்துக் கொள்ளவோம். ஆனால் ஒவ்வொரு நடிகருக்கும் பின்னால் ஒரு பெரிய போராட்ட கதை இருக்கும். அப்படித்தான் நடிகர் வையாபுரியும் இப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பழைய நினைவுகளை வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.

Vaiyapuri

நடிகர் வையாபுரி பேட்டி

சினிமாவில் தான் சந்தித்த கஷ்டங்கள், கிடைத்த சந்தோஷங்கள், மறக்க முடியாத மனிதர்கள் என பல விஷயங்களை அவர் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவர் சமுத்திரக்கனியை பற்றி பேசியிருக்கும் ஒரு வீடியோ தான் இப்போது கவனம் பெற்று இருக்கிறது. அதில் நானும் சமுத்திரகனியும் ஆரம்பத்தில் சைக்கிளில் ஒன்றாக வாய்ப்பு தேடி சாப்பிட காசு இல்லாமல் தெருவில் அலைஞ்சு இருக்கிறோம்.

எந்த ஏரியாவுக்குள் வாய்ப்பு தேடி ரொம்ப அலைஞ்சோம்மா... அதே ஏரியாவுக்குள் 10வது தெருவில் அவருடைய வீடு. 13-வது தெருவில் என்னுடைய வீடு. இதை நினைக்கும் போது பெருமையாக இருக்கு. இதுவரைக்கும் அவர் கூட சேர்ந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது இல்ல. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு வாய்ப்பு கிடைத்ததுன்னா அது தலைகூத்தல் படம் மூலம் தான் என்று வையாபுரி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

வையாபுரியின் சினிமா பயணம்

இப்போது இதுதான் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. வையாபுரி சொல்வதை கேட்டால் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் காலம் எப்படி இருந்திருக்கும் என்பது நமக்கே ஓரளவுக்கு புரியும். இன்று ஒரு நடிகர் பட வாய்ப்புக்காக சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டாலே ஆயிரக்கணக்கானோர் அதை பார்க்கிறார்கள். ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக நேரடியாக சென்று கதவுகளை தட்டும் காலத்தை கடந்து வந்தவர்கள்.

சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் நாங்கள் வாய்ப்புக்காக அலைந்தோம் என்று பல நடிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது வையாபுரியும் சொல்லி இருக்கிறார். வையாபுரி தமிழ் சினிமாவில் 1990 களில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறார். ராமன் அப்துல்லா, காதலா காதலா, துள்ளாத மனமும் துள்ளும், ஜெமினி, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் சினிமா பயணம்

சமுத்திரக்கனியும் மறுபக்கம் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் வேறு பாதையை உருவாக்கிக் கொண்டார். உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் எழுத்தாளராக திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனராகவும், நடிகராகவும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கினார். இருவருடைய பயணமும் வெவ்வேறு திசைகள் சென்றாலும் ஆரம்பகால கஷ்டங்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது.

சினிமாவில் வெற்றி பெற்றவர்களை மட்டும் பார்த்தால் கதை பாதி தான் தெரியும். அவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பு சைக்கிளில் எத்தனை காலம் சுற்றினார்கள் என்பதுதான் முழு கதை. வையாபுரி, சமுத்திரகனி கதையும் அப்படிப்பட்ட ஒரு பழைய சினிமா நினைவுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+