Devayani: பெண்கள் உடையில் கண்ணியம் வேண்டும்! நமக்குன்னு கலாச்சாரம் இருக்கு! ஓபனா பேசிய தேவயானி
சென்னை: நடிகை தேவயானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது பெண்கள் உடுத்தும் உடைகுறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இதையும் விமர்சித்து வருகின்றனர். தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதை வைத்து தேவயானியின் மீதும் சில கமெண்ட் தாக்குதல்கள் நடக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை பார்க்கும்போது ஏதோ பக்கத்து வீட்டு பெண் போன்றே தோன்றும். அந்த நடிகைகள் அதிகமாக மேக்கப் போடுவது கிடையாது, ஆபாசமாக உடை அணிவது கிடையாது.. அப்படி பார்த்தால் ஒரு சில நடிகைகள் குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வரிசையில் நடிகை தேவயானியும் வருவார். தேவயானி ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான தொட்டாச்சிணுங்கி மற்றும் சிவசக்தி இரண்டு படங்களுமே ஆபாசமாக உடை அணிந்து இருப்பார் அது பற்றி அவர் சொல்லும்போது கூட எனக்கு ஆரம்பத்தில் இதுபோன்ற உடை தான் தருவார்கள் என்று தெரியாமலேயே நான் அந்த படத்தில் கமிட் ஆகி விட்டேன் அதற்கு பிறகு தான் நான் இதுபோன்ற நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக முடிவெடுத்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

முதல் இரண்டு படங்களுக்கு பிறகு அவர் நடித்த எல்லா படங்களிலும் ஹோம்லியான உடை தான் அணிந்து இருப்பார். புடவை அல்லது சல்வார், சுடிதார் போன்றவை தான் அணிந்திருப்பார். அதனாலேயே இவருக்கென்று அதிகமான ரசிகர்கள் உண்டு. மார்டன் உடை அணியும் நடிகைகளுக்கு இருக்கும் மவுஸ் புடவையில் சாந்தமாக இருக்கும் நடிகைகளுக்கும் இருக்கு என்று இவரை போன்ற ஒரு சில நடிகைகள் நிரூபித்து வருகிறார்கள்.
90's காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமான தேவயானி இப்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம். தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து இப்போது மீண்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜீ தமிழ் சரிகமப.. தேவயானி மகள் இனியாவுக்கு வாழ்த்து! உயரம் குறைவா? கலர் கம்மி? ராஜகுமாரன் சபாஷ் நச்
தேவயானியின் மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அவரால் டாப் 5 போட்டியாளர்கள் லிஸ்டில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவருக்கென்று அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இதைத்தான் இனியா எதிர்பார்த்தார், இப்போது அது நடந்து விட்டது. அதுபோல தேவயானியின் இரண்டாவது மகளும் சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தேவயானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் உடை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் சொல்லும்போது, "என்னை பொருத்தவரை பெண்களின் உடை யாருடைய கண்ணையும் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைப்பேன். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோம் நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு. நம்முடைய உடையில் புடவை, சுடிதார், சல்வார்னு எவ்வளவோ இருக்கு. அந்த பாரம்பரியத்தை காப்பாத்தணும்.நம்மளோட கலாச்சாரம் ரொம்ப முக்கியம் என்று பேசி இருக்கிறார்.
தேவயானி பேசிய கருத்தை சிலர் பாராட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் என்ன தேவயானி மேடம் இப்படி பூமர் மாதிரி பேசுறாங்க என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதனால் நல்லது சொன்னால் யாரு கேக்குறாங்க என்று தேவயானியின் ரசிகர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications