நடிகை திவ்யாவுக்கு கிடைத்த வெற்றி.. புதிய தொடக்க, மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டாட்டம்
சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் கணவரோடு ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு சில நாட்களாகவே மோட்டிவேஷன் வீடியோக்களை வெளியிட்டு வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்த நிலையில் இவருடைய புதிய முயற்சிக்கு பலர் பாராட்டு கூறி வருகிறார்கள்.

செவ்வந்தி சீரியல் கதாநாயகி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலின் கதாநாயகியான திவ்யாஸ்ரீதர் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலின் கதாநாயகனாக நடித்துவரும் அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் தான் முடிந்தது. இந்த நிலையில் தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.

அனுதாப அலைகள்
கணவரை பிரிந்து இருக்கும் திவ்யாவிற்கு சின்னத்திரை நடிகர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பு எளிமையாக வீட்டிலேயே ஐந்தாவது மாத வளைகாப்பு பங்க்ஷனை நடத்தி இருந்தனர். தன்னுடைய காதல் கணவர் மீது தனக்கு இருக்கும் அன்பு பாசத்தை இவர் எனக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் போது இவர் வெளிகாட்டியதை தொடர்ந்து ரசிகர்கள் இப்ப வரைக்கும் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கர்ப்பமாக மனைவி இருக்கும் நிலையில் இவருடைய கணவர் பிரிந்து இருக்கிறாரே என்று பலர் இவருக்கு அனுதாப அலைகள் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது.

புது கார்
இந்த நிலையில் இப்போதும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக தான் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் இவருடைய கணவர் இறந்து விட்டார். தற்போது இரண்டு குழந்தைகளை வளர்த்து வருவது இவருடைய கேரக்டராக இருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் இவர் கணவர் இல்லாமல் கஷ்டப்படுகிறார். சீரியலிலும் இப்படியா? என்று பலர் கூறிவரும் நிலையில் இவர் இன்று புதியதாக எம்ஜி ஹெக்டார் ஷார்ப் சிவிடி என்ற புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதை தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார்.

எதுவும் சாத்தியமாகும்
திவ்யா ஸ்ரீதர் கன்னட நடிகை ஆக இருந்தாலும் தமிழில் கேளடி கண்மணி சீரியல் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் ஒரு சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போதுதான் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனை பொருட்டு இவர் தன்னுடைய கஷ்டமான காலங்களில் தனக்கு உதவியாக இருக்கும் நபர்களாலும், ரசிகர்களாலும் தான் கஷ்டங்களை கடந்து மேலே வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல புதிய ஒன்றின் ஆரம்பம் ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை தருகிறது. எதுவும் சாத்தியமாகும் என்று தன்னம்பிக்கை வரிகளை உதிர்த்திருக்கிறார். இதற்கு லைக்குகள் மட்டுமல்லாமல் கமெண்ட் பாக்ஸில் வாழ்த்துக்களோடும் நிறைந்து வருகிறது. ரசிகர்கள் பலர் மீண்டும் இவர் இவருடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி தங்களுடைய விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்












Click it and Unblock the Notifications