அதை அடிக்கடி செய்யாதீங்க? உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது- ரசிகர் கமெண்ட்..கேப்ரில்லா கொடுத்த பதில்
கேப்ரில்லா நடித்து வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் அடிக்கடி அழுகை சீன்கள் இருப்பதால் அதனால் உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் வெளியிட்டதை தொடர்ந்து அதற்கு கேப்ரில்லா பதில் கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகை கேப்ரில்லா சமூக வலைத்தளத்தில் தனக்கு வந்த கமெண்ட்க்கு தன்னுடைய பதிலை தெரிவித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் நடித்து வரும் கேப்ரில்லா அந்த சீரியலில் அதிகமாக அழுது கொண்டே நடிப்பதாக ரசிகர் ஒருவர் அவரை கலாய்த்து இருக்கிறார்.
அதிகமாக அழுது உடல் நலம் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று அந்த ரசிகர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
முதலில் இது என்னுடைய வேலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது எனது உடல் நிலையை பாதித்தாலும் கதைக்கு அது தேவைப்பட்டால் நடித்துதான் ஆக வேண்டும் என்று கேப்ரில்லா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் பிரபலம்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் காவியா கேரக்டரில் நடித்து வரும் கேப்ரில்லா சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்த நபர்தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறி இருந்தார். அந்த சீசனில் அவர் கடைசி வரைக்கும் இருப்பார் என்று ஆரம்பத்தில் இருந்து இவருடைய ரசிகர்கள் இவருக்காக ஓட்டு அளித்து பாதுகாத்து வந்தாலும், கடைசி நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத செயலை செய்துவிட்டார் என்று நெட்டிசங்கள் அப்போது அவரை கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்த பிறகு அதை மறக்க தொடங்கினார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கேபி திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு அவர் அறிவித்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் அவர் சீரியலில் கதாநாயகியாக மாறி இருந்தார். ஆனால் இவர் கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்கவில்லையா? என்று தொடர்ந்து இவரிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்திலும் அதற்கும் கேப்ரில்லா விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவரும் ஆஜித்தும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றனர்.

ரசிகரின் கமெண்ட்
தற்போது ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் காவியா கேரக்டரில் மீண்டும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபகாலமாக சீரியலில் அடிக்கடி அழுகாச்சி சீன்களில் கேபி அழுது கொண்டிருப்பதை பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர் ஒருவர், இது மாதிரி காட்சிகளை எடுப்பதை கொஞ்சமாவது நிறுத்துங்கள். கிளிசரின் கூட போடாமல் இவர் இப்படி நடிப்பது அவரது உடல் நலத்தையும் பாதிக்கும் அவருக்கு கொஞ்சமாவது பிரேக் கொடுங்கள் இவரது கடின உழைப்பு தேவையில்லாத காட்சிகளுக்கு எல்லாம் வீணாக போகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

கேப்ரில்லா பதில்
அந்த ரசிகரின் கமெண்டை பார்த்த கேப்ரில்லா முதலில் இது என்னுடைய வேலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அது எனது உடல் நிலையை பாதித்தாலும் கதைக்கு அது தேவைப்படலாம் ஆனால் என்னை இந்த கமெண்டில் கவர்ந்தது என்னவென்றால் நான் செய்யும் வேலைக்கு உங்கள் அங்கீகாரமும் அக்கறையும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications