நீங்க பண்றது ஜர்னலிஸமா? வெயிட் தெரிந்து என்ன பண்ண போறீங்க? கெத்து நடிகை கௌரி கிஷனுக்கு எகிறும் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே ஒரு சர்ச்சையான விஷயம் நடக்கிறதென்றால், அதற்கு 2 பக்கங்கள் பேசப்படும்.. ஆனால் இந்த விஷயத்தில் எல்லாருமே ஒன்றுசேர்ந்து எனக்காக பேசுவது நிம்மதியாகிறது.. பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை மிகவும் ஆபத்தானது.. பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்கணும்" என்று பிரபல நடிகை கவுரி கிஷன் பேட்டியொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் தியேட்டருக்கு வந்துள்ளது..

Gouri Kishan Actress Weight

சென்னையில் இதுசம்பந்தமாக நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் ஹீரோயின் கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று கிண்டலாக கேட்கப்பட்டது.

ஹீரோயின் வெயிட்

ஆனால், கவுரி கிஷன் இந்த கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்..

நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து கவுரி கிஷனிடம் கேட்கப்பட்டது. அதற்கு கவுரி கிஷன் "இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?, என் உடல் எடை குறித்து ஹீரோவிடம் கேட்கலாமா? இதுவும்பாடி ஷேமிங் செய்வது போலத்தான்.. என் எடையை தெரிந்துகொண்டு நீங்க என்ன செய்யப் போறீங்க" என்று கொந்தளித்தார்.. இதுவே அங்கு வாக்குவாதமாக வெடித்து, சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

கௌரி கிஷனுக்கு பெருகும் ஆதரவு

இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி, கௌரி கிஷனுக்கான தன்னுடைய ஆதரவை முதலில் பதிவிட்டார்.. அந்த பதிவில், "கவுரி அற்புதமாக பதில் கொடுத்தார். இளம் நடிகை ஒருவர் தனது நிலைப்பாட்டில் பின்வாங்காமல் நின்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பதில்லை. ஒரு நடிகையிடம் மட்டும் ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை" பதிவிட்டிருந்தார்,

பிறகு நடிகை குஷ்பு, ரோகிணி, டைரக்டர் பா.ரஞ்சித், நடிகர் கவின் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை கவுரி கிஷனுக்கு தெரிவித்துள்ளனர். அதேபோல நடிகர் சங்கமும், நடிகைக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து, சர்ச்சை கேள்வியை எழுப்பிய யூடியூபருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

பாடிஷேமிங் ஏற்க முடியாதது

இந்நிலையில், ஒரு தனியார் சேனலுக்கு கௌரி கிஷன் அளித்த பேட்டியில், பிரஸ்மீட் துவங்கிய 2 நிமிஷத்தில் என்னுடைய உடல் எடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. என்னுடைய வெயிட்டை தெரிஞ்சிட்டு அவர் என்ன செய்ய போறார்? உடல் எடையை பற்றி பேச அவருக்கு யார் உரிமை தந்தது?

பிரஸ்மீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேற நினைத்தேன்.. ஆனால் படத்துக்காக அமைதியாக இருந்தேன்.. எனக்காக சோஷியல் மீடியாவில் ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி..

பெண்கள் கேள்வி கேட்கணும்

எப்போதுமே ஒரு சர்ச்சையான விஷயம் நடக்கிறதென்றால், அதற்கு 2 பக்கங்கள் பேசப்படும்.. ஆனால் இந்த விஷயத்தில் எல்லாருமே ஒன்றுசேர்ந்து எனக்காக பேசுவது நிம்மதியாகிறது.. பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை மிகவும் ஆபத்தானது.. பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்கணும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல மற்றொரு டிவி சேனலுக்கு கவுரி கிஷன் அளித்த பேட்டியில், பெண்கள் என்றாலே ஒருபடி கீழேதான் என்ற மனநிலை இங்கு பரவலாக உள்ளது.. அந்த செய்தியாளர் என் உடல் எடை பற்றி கேட்டதுமே, நான் கண்ணீர் விட்டு அழ நினைத்தேன். ஆனால் அப்படி அழுதால், அது அவர்களுடைய பலமாகிவிடும்..

என் உடல் எடை என்ன

முதலில் சின்மயி மேடம் எனக்கு ஆதரவு தந்து பதிவிட்டிருந்தார்கள்.. அதேபோல ரோகினி மேடம், குஷ்பு மேடம் எனக்காக ஆதரவு தந்துள்ளார்கள்.. மாரி செல்வராஜ், 96 பட டைரக்டர் பிரேம் என எல்லாருமே எனக்கு கால் செய்து பேசினார்கள்.. அப்போதுதான் நான் பிரஸ்மீட்டில் பேசியது சரி என்று பட்டது.. ஆனால், இதை எனக்காக மட்டுமல்ல, எந்த பெண்ணுக்குமே இப்படி நடக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+