கணவர் சொல்லியும் கேட்காமல் பண்ணி விட்டேன்... இப்போ பீலிங்காக இருக்கிறது.. கவலைகளை கொட்டிய ஆலியா
சென்னை: சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வரும் ஆலியாவிற்கு காலில் அடிபட்டு இருக்கிறது.
முதல் முறை தன்னுடைய காலில் எதனால் அடிபட்டது என்று என்பதை பற்றி ஆலியா கூறி இருக்கிறார்.
கபடி விளையாடும் போது எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு இருக்கிறது.

காரணம் இவர்தான்
சன் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ஆலியா மானசா முதல் சீரியலிலே யார் எதிர் பார்க்காத அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அதுவும் குறிப்பாக "சின்னையா" என்று இவர் அழைத்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தாலும் அதுவே இவருடைய அடையாளமாக மாறிவிட்டது. தற்போதைய பல சீரியல்களில் பல கதாநாயகிகள் கணவரை சார் என்று அழைப்பதற்கு காரணம் இவர்தான் என்று இப்ப வரைக்கும் ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த செம்பா
செம்பா கேரக்டரில் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்தார் என்று சொல்வதை விடவும் கேரக்டராக மாறி இருந்தார். அதனாலே அவர் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களின் மத்தியிலும் அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார்.ராஜா ராணி முதல் பாகத்தில் ஆலியா மானசாவோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் சீரியலில் திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு திருமணத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2வில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்தார்.

உருக்கமான பதிவு
இந்த நிலையில் தற்போது "நான் அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சஞ்சீவ் கார்த்திக் மனைவி, ஏனென்றால் அவர் என்னை கவனித்துக் கொள்ள தவறியதே இல்லை. என் கெட்ட நேரத்திலும் ஆதரவாக இருப்பார். அவர் என்னை ஒரு பாரமாக பார்ப்பதில்லை. நான் மற்றும் அப்படித்தான் என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்கிறது. அவர் அக்கறை கொள்கிறார் நான் ஒவ்வொரு நொடியும் அவர் காயப்பட்டாலும் அவர் வலியை நான் உணர்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் என் வலியை உணர அவர் விடமாட்டார். சஞ்சீவ் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசு" என்று உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆலியாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

கணவரின் கண்டிப்பு
இந்த நிலையில் காலில் ஆபரேஷன் செய்த பிறகு தற்போது ஆலியா மானசா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சஞ்சீவ் ஆலியாவிற்கு காலில் அடிபட்டு இருக்கிறது என்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் அனைவரும் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். அது வேறொன்றுமில்லை ஆலியா கபடி விளையாடும் போது அவருக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டு இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு சஞ்சீவ் நான் தான் ஆரம்பத்திலேயே இது வேண்டாம் என்று சொன்னேனே என கேட்க, நாம் எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்க கூடாது. கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றேன். ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஆலியாவின் வீட்டில் அவர் மட்டும்தான் இருந்து வருகிறார். குழந்தைகள் மற்றும் மாமியார் அனைவரும் துபாய் சென்று விட்ட நிலையில் தான் வீட்டில் தனியாக இருப்பதற்கு தான் வேதனையாக இருக்கிறது என்று ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications