"கடவுள் கண் முன்னாடி பால் குடிக்கிறதை பார்த்து இருக்கிறேன்" நடிகை ஜானகி தேவி நெகிழ்ச்சி..!!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் ஜானகி தற்போது பேசிய வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கடவுள் மீது தனக்கு இருக்கும் அன்பை உணர்ச்சி பூர்வமாக ஜானகி தேவி வெளிக்காட்டி இருக்கிறார்.
தன்னுடைய வீட்டில் கடவுள் இவருடைய கண் முன்பே பால் குடித்ததை இவர் பார்த்ததாக கூறியிருக்கும் வீடியோ தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது.

சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகம்
ஜானகி தேவி முதல் முறையாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சசிகுமாரின் முறை பெண்ணாக நடித்திருப்பார். கிராமத்து எதார்த்தத்தை இவருடைய நடிப்பில் பார்த்த ரசிகர்கள் இவர் கேரக்டராகவே மாறி இருப்பதாக கூறி வந்தனர். அதுவும் சசி குமார் இவரிடம் செய்யும் நக்கல் நையாண்டித்தனம் அதற்கு இவர் வெடுக்கென பேசும் விதமும் இந்த திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருந்தது. இவருடைய எதார்த்தமான மதுரை பேச்சு இந்த படத்திற்கு பக்காவாக பொருந்தி இருந்தது.

வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்
சுந்தரபாண்டியன் படத்தில் பிறகு பட வாய்ப்புகள் அந்த அளவிற்கு இல்லாததால் இவர் சமூக வலைத்தளத்தில் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் இவரிடம் வாய்ப்பு வேண்டும் என்றால் மீட் பண்ண வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு சிலர் பேட் அப்ரோச் செய்ததாக பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார். அந்த மாதிரி தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று இவர் திரைப்படங்களை விட்டுவிட்டு தற்போது சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார்.

கயல் சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலின் அண்ணன் மனைவியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர் அதுவும் எந்த ஒரு மேக்கப் இல்லாமல் இவர் வெகுளித்தனமாகவும் இருப்பதாக பலர் இவருடைய கேரக்டருக்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இவர் பேசிய ஒரு பேட்டி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், இவர் மதுரையை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவருடைய குலதெய்வம் சுடலை மாட சுவாமி தானாம். இவர் வராஹி அம்மனின் தீவிரமான பக்தையாம். வராஹி அம்மன் மீது திடீரென்று அதிகமாக பாசம் வந்ததாக கூறி இருக்கிறார். ஒருமுறை இவர் ஷூட்டிங் சென்று விட்டு இரவு லேட்டாக வீட்டிற்கு வந்திருக்கிறார். வந்த பிறகு சாமிக்கு படையல் போட்டு பூஜை செய்து கொண்டிருந்திருக்கிறார்.

பூஜை அறை அதிசயம்
பூஜை அறையில் தனியாக இவர் மட்டும் அமர்ந்து பூஜை வேலைகளை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவருடைய மகளும் கணவரும் வீட்டில் வேறு ஒரு அறையில் இருந்தார்களாம். திடீரென்று இவருடைய மகள் ஹாலுக்கு வந்திருக்கிறார். அப்போது பாப்பாவை கூப்பிட்டு நீ சாமிக்கு பாலூட்டு என்று கூறியிருக்கிறார். அப்போது அவருடைய குழந்தை ஸ்பூன் மூலமாக பாலை எடுத்து வராஹி அம்மன் சிலைக்கு ஊட்டி இருக்கிறது. அதை ஒரு குழந்தை பாலை உறிஞ்சுவது போல ஸ்பூனில் இருக்கும் பாலை அம்மன் சிலை உறிஞ்சி குடித்து இருக்கிறது. இதை பார்த்ததும் அந்த குழந்தையே பயந்து போய் விட்டதாம். அன்று முதல் இவருக்கு உறுதுணையாக முழு கடவுளாக வராஹி அம்மன் இருந்து வருவதாக கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications