இனி ஒரு ரூபாவாக இருந்தாலும் என்கிட்ட தான் கைக்கட்டி நிக்கணும்... மகாலட்சுமியின் பதிவு.. காரணம்..!!
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி திடீர் திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி செய்யும் செயல்களை சமூக வலைத்தள ரசிகர்கள் அதிகமாக கவனித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பார்த்து தான் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

சர்ச்சைகளை கண்டு கொள்வதே இல்லை
தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் விஜே மகாலட்சுமி தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பேசப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார். சர்ச்சைகளில் அடிக்கடி மகாலட்சுமியின் பெயர் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்து அவருடைய பயணத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துள்ளார்.

எளிமையான திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் இவர்களுடைய திருமணத்தை எளிமையாக திருப்பதி கோயிலில் வைத்து முடித்திருந்தனர். திருமணம் முடிந்த பிறகு தங்களுடைய திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இவர்கள் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரல் ஆகிவிட்டது. நெட்டிசன்களால் இவர்களுடைய புகைப்படம் கலாய்க்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் அதில் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

பரபரப்பு ஏற்படுத்தும் புகைப்படங்கள்
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர், இவர்களுடைய திருமணம் இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தும் என்று இவர்கள் இருவரும் எதிர்பார்க்கவே இல்லையாம். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி போட்டோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஐடியில் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சில யூடியூப் களில் கூட தங்களுடைய திருமணத்தை பற்றியும் தங்களுடைய காதல் வாழ்க்கையை பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார்கள். இதை வைத்து நெட்டிசன்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை கண்டு கவலைப்படாமல் இருந்து வந்தாலும் மகாலட்சுமியின் ரசிகர்கள மகாலட்சுமிக்காக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஏன் இந்த பதிவு
தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் மகாலட்சுமி தான் நடித்துக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலின் அவர் நடித்த காட்சிகளை வைத்துள்ளார். அதை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.அந்த வீடியோவில், "இனி ஒரு ரூபாவாக இருந்தாலும் என்கிட்ட தான் கைகட்டி நிக்கணும்" என்று அந்த சீரியலின் பூமிகாவிடம் இவர் வாசுகி கேரக்டரில் சொல்வது போல இருக்கிறது. ஆனால் இதை பார்த்த நெட்டிசன்கள் இனி ரவீந்தரின் நிலைமையும் இதுதான் போல, சீரியலிலே இப்படி மிரட்டுகிறாரே அப்போ வீட்டில் எப்படி மிரட்டுவார் என்றெல்லாம் கலாய்த்து வருகிறார்கள்.

ஏன் இந்த பதிவு
தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் மகாலட்சுமி தான் நடித்துக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலின் அவர் நடித்த காட்சிகளை வைத்துள்ளார். அதை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.அந்த வீடியோவில், "இனி ஒரு ரூபாவாக இருந்தாலும் என்கிட்ட தான் கைகட்டி நிக்கணும்" என்று அந்த சீரியலின் பூமிகாவிடம் இவர் வாசுகி கேரக்டரில் சொல்வது போல இருக்கிறது. ஆனால் இதை பார்த்த நெட்டிசன்கள் இனி ரவீந்தரின் நிலைமையும் இதுதான் போல, சீரியலிலே இப்படி மிரட்டுகிறாரே அப்போ வீட்டில் எப்படி மிரட்டுவார் என்றெல்லாம் கலாய்த்து வருகிறார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications