நடிகை ரம்பா வீட்டில் விசேஷம்.. அம்மாவுக்கு போட்டியாக அழகில் ஜொலிக்கும் மகள்கள்.. லீக் ஆன புகைப்படங்கள்
சென்னை: நடிகை ரம்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதுபோல இவருக்கு தொடை அழகி என்ற ஒரு பட்ட பெயரும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் கனவு கன்னியாகவும் பலருடைய மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்த நடிகை ரம்பா இப்போது சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளோடு செட்டில் ஆகி இருக்கும் ரம்பா தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய வீட்டில் நடந்த பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை ரம்பா வெளியிட்டதும் அதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.. அதாவது ரம்பாவை போலவே அவருடைய மகள் அப்படியே அச்சில் வார்த்தது போல இருக்கிறார்.

நடிகை ரம்பா தமிழில் காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், த்ரீ ரோசஸ், குங்குமபொட்டு கவுண்டர், பூமகள் ஊர்வலம், உள்ளத்தை அள்ளித்தா என்று பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜானகிராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் என பல வெற்றி திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் தான் விஜயவாடாவை சேர்ந்த ரம்பா இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரம்பாவிற்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். குடும்பத்தோடு ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கும் முன்புதான் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று கண்ணீரோடு ரம்பா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு அந்த குழந்தையின் உடல்நிலை சரியாகி விட்டது என்றும் கூறியிருந்தார் .

தற்போது ரம்பாவுக்கு 47 வயது ஆகிறது. இந்த நிலையில் ரம்பாவின் மகள்களும் அவரைப் போலவே விறுவிறுவென வளர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் ரம்பாவின் வீட்டில் ஒரு பூஜை நடைபெற்றிருக்கிறது. அந்த பூஜையின் போது எடுத்த குடும்ப புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ரம்பா சிறு வயதில் இருந்ததை போலவே இப்போது அவருடைய மகள் அச்சில் வார்த்தது போல இருக்கிறார்.

தாவணியில் ரம்பாவின் மகளைப் பார்த்ததும் ரசிகர்கள் சினிமாவிற்கு அடுத்த கதாநாயகி ரெடி ஆகிவிட்டார் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ரம்பாவின் மகள்கள் ரம்பாவை போல சினிமாவை ஜொலிக்கப் போகிறார்களா? அல்லது அவர்களின் திறமையின்படி பிற துறையில் ஜொலிக்க போகிறார்களா? என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications