பாண்டியன் ஸ்டோரை விட்டு விலகிய சாய் காயத்ரி செய்த செயல்..குவியும் வாழ்த்துக்கள்..நல்ல முடிவு தானாம்!

நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய பிறகு தன்னுடைய அம்மாவோடு கோவில்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை சாய் காயத்ரி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

தன்னுடைய சொந்த காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வெளியேறிய சாய் காயத்ரி தன்னுடைய சேர்ந்து எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

கோவில் குளங்களுக்கு சுற்றி வரும் சாய் காயத்ரி தற்போது தன்னுடைய நிலைமையை குறித்து உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவ்

இணையத்தில் ஆக்டிவ்

இணையதளங்களில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வரும் நிலையில் தனது ஆடையில் கவர்ச்சி காட்டாமல் கண்களிலே ரசிகர்களை கிறங்கடித்து வரும் சாய் காயத்ரியின் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இவர் தமிழ் சினிமாக்களில் பணிபுரிந்து வந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் .இவர் சீரியல்களில் நடிப்பது போலவே இணையதளத்திலும் கண்ணியமான உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். சீரியலில் இவருக்கு இருப்பதுபோலவே இணையதளத்திலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .

ஆரம்ப காலம்

ஆரம்ப காலம்

சாய் காயத்ரி சிவா மனசுல சக்தி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். சாய் காயத்ரி மதுரையில் பிறந்து இருந்தாலும் மதுரையில் ஹையர் செகண்டரி வரைக்கும் முடித்துவிட்டு விஷுவல் கம்யூனிகேஷன் சென்னையில் படித்து இருக்கிறார். சாய் காயத்ரி படித்துக்கொண்டிருக்கும்போது மாடலிங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மாடலிங் மூலமாக தான் இவருக்கு சீரியலில் வாய்ப்பு வந்திருக்கிறது. இவர் நடிக்க ஆரம்பித்ததும் இவரது குடும்பமும் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து இருக்கிறது. ஜாலியான கலகலப்பான குடும்பத்தில் இவர் செல்ல பிள்ளையாம்.

பிடித்த பொருள்

பிடித்த பொருள்

சாய் காயத்ரி இவருடைய அம்மாவிடம் தான் தன்னுடைய கோபத்தை காட்டுவாராம் .எந்த டென்ஷன் இருந்தாலும் அம்மாவிடம் திட்டி விட்டு சிறிது நேரத்தில் எதுவுமே நடக்காதது போல வந்து பேசி விடுவாராம் . இது இவங்க அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய மகள் தானே என்று பொறுத்து கொள்கிறாராம். இவருடன் எப்பவும் இருக்கும் பொருட்களில் ஒன்றாக சீப்பு இருக்கிறதாம். அடிக்கடி தலையை சீவி கொண்டே இருப்பாராம், சீப்பு இல்லாமல் இருக்க முடியாதாம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் கூட நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவரே ஜாலியாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட நடிப்பவர்களை ஒருவழிபடுத்தி விடுவாராம். எப்போதும் ஜாலியாக அவரும் இருந்துகொண்டு கூட இருப்பவர்களையும் கலகலப்பாக வைப்பதுதான் இவரது வேலையாம்.

தற்போது பக்தி மயம்

தற்போது பக்தி மயம்

சாய் காயத்ரி நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொகுப்பாளர். அவர் ஜெயா டிவி ,ஜீ தமிழ் டிவி, ராஜ் டிவிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை விஜய் டிவியில் நடித்திருக்கிறார். தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இணையதளத்தில் விதவிதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டும் உடைகளில் நேர்த்தியாகவும் போடும் போஸ்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறதாம்.இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய அம்மாவோடு அவர் பல நாட்களாக போக வேண்டும் என்று நினைத்திருந்த ஒவ்வொரு கோயில்களுக்காக சென்று கொண்டிருப்பதாகவும், இதுவெல்லாம் நடப்பது கடவுளின் சித்தம் என்றும் உருக்கமாக வீடியோவையும், பதிவுகளையும் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+