அந்த நடிகரை கல்யாணம் பண்ணலேன்னா அவ்வளவுதான்! கமலால் பாம்பு என் கன்னத்தில்.. சிவரஞ்சனி ஓபன்
சென்னை: நடிகை சிவரஞ்சனி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த் பற்றியும் நடிகர் கமல்ஹாசனோடு நடிக்கும் போது ஏற்பட்ட திரைப்பட அனுபவங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் உடன் கலைஞன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது பாம்பு உடன் நடித்தது குறித்து பல ரகசியங்களை சிவரஞ்சனி உடைத்திருக்கிறார்.
நடிகை சிவரஞ்சனி தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்தது குறித்து பேசி இருக்கிறார். ஸ்ரீகாந்த் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் மூத்த அண்ணனாக நடித்த நடிகர் தான். அவரைத்தான் சிவரஞ்சினி திருமணம் செய்து இருக்கிறார்.

என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது என்னுடைய கணவரை திருமணம் செய்ததுதான். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையின் மாறியது. நான் 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் புகழில் உச்சத்தில் இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் நடித்த பல படங்கள் கிட் அடித்தது. அதனால் ஏன் இப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று பலர் கேட்டார்கள்.
நான் இதுதான் எனக்கு சரியான நேரம் என்று சொன்னேன். இப்போ வரைக்கும் என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதுபோல சினிமாவில் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று சொன்னால் அது பாம்பு உடன் நடித்தது தான் என்று சொல்வேன். நடிகர் கமல்ஹாசனுடன் நான் கலைஞன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த அந்த திரைப்படத்தில் கொக்கரக்கோ பாடலுக்கு நான் மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகிவிட்டேன்.
அப்போது மேக்கப் மேன் வந்து மேடம் நீங்க ரெடியா ஷூட்டிங் ரெடி ஆகிவிட்டது என்று சொன்னார். நானும் சரி என்று கிளம்பி வெளியே வரும்போது மேடம் ஷூட்டிங்க்கு பாம்பு வந்திருக்கிறது என்று சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது நான் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து விட்டேன். பிறகு கமல்ஹாசன் வந்து நடிகை ரெடியா என்று கேட்டிருக்கிறார். அப்போது மேக்கப் மேன் அவர் பாம்பு வந்திருக்கிறது என்று சொன்னதும் பயந்து உள்ளே இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
பிறகு கமல்ஹாசன் வந்து என்னிடம் ஐந்து நிமிடம் பேசினார். அந்த பாம்பு பாவம் அதை நாம எதுவும் செய்யாமல் அது நம்மை எதுவும் செய்யாது. அதுவும் ஒரு உயிரினம் தான் என்று கவுன்சிலிங் கொடுத்தார். அதற்குப் பிறகுதான் நான் அந்த காட்சியில் நடித்தேன். அப்போது அந்தப் பாடலில் பாம்பை கையில் வைத்திருக்கும் போது கூட எனக்கு பயம் பெரியதாக இல்லை. ஆனால் ஒரு காட்சியில் அந்த பாம்பை என் முகத்துக்கு நேராக நான் நீட்டும் போது அது என்னுடைய கன்னத்தில் நக்கும். அப்போது எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது.
ஆனாலும் அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அந்த பாட்டில் பாம்புடன் நடித்த பிறகு எனக்கு பாம்பு மீது இருந்த பயமே போய்விட்டது. அதற்குப் பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் நான் பாம்பாக நடித்தேன். அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. அந்த பாம்பை என்னுடைய மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தேன். அதற்கு காரணம் கமல்ஹாசன் தான். அவர்தான் எனக்கு தைரியத்தை கொடுத்தார் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதோடு நடிகர் விஜயகாந்த் முரளி குறித்தும் பல்வேறு விஷயங்களை சிவரஞ்சினி பகிர்ந்து இருக்கிறார். நடிகை சிவரஞ்சனி சின்ன மாப்பிள்ளை, தாலாட்டு, வண்டிச்சோலை சின்ராசு, பொன்விலங்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அஞ்சு கெஜம் காஞ்சி பட்டு, மெதுவா தந்தி அடிச்சானே, இருக்கஞ்செடி ஓரம் இறுக்கி புடிச்ச என் மாமா, போன்ற பாடல்கள் பேருந்து பயணத்தில் கேட்கும் எவர்கிரீன் பாடல்களாக இருக்கிறது. இந்த பாடல்களில் க்யூட்டாக இவர் தன்னுடைய எக்ஸ்பிரஷனை காட்டி இருப்பார். இவருடைய கண்களுக்கு இப்போதும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது அவர் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications