நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட்
சென்னை: நடிகை ஸ்வாசிகா மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். காரணம் அவரது புதிய பேட்டி. திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப வாழ்க்கை குறித்து அவர் கூறிய சில கருத்துகள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
ஆனால் இந்த முறை சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், மலையாள ரசிகர்கள் மட்டும் பழைய பேட்டியை எடுத்துக் காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை ஸ்வாதிகா தமிழில் மாமன், லவ்வர் பந்து மற்றும் கருப்பு போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் சீரியலில் நடித்திருந்தாலும் இப்போது திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

நடிகை ஸ்வாசிகா பேட்டி
சமீபத்தில் விஜய் டிவி நடிகர் பிரேம் ஜேக்கப்பை திருமணம் செய்து கொண்ட ஸ்வாசிகா, திருமணத்திற்கு பிறகு அளித்த ஒரு மலையாள பேட்டியில், "தினமும் காலையில் எழுந்ததும் கணவரின் காலில் விழுந்து வணங்குவேன்" என்று கூறியிருந்தார்.
இந்த ஒரு கருத்தே கேரள சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. "இது எந்த காலத்து சிந்தனை?", "பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசும் நேரத்தில் இப்படியா?" என்று பலர் விமர்சித்தனர்.
அதே நேரத்தில் சிலர், "அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" என்றும் கருத்து தெரிவித்தனர்.
இப்போது மீண்டும் புதிய பேச்சு
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது ஒரு தமிழ் யூடியூப் பேட்டியில் ஸ்வாசிகா தனது திருமண வாழ்க்கை குறித்து மேலும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியது தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. "நான் வீட்டில் இருந்தால் என் கணவருக்கு நானே சமைத்து கொடுப்பேன். பாத்திரங்களையும் நானே கழுவுவேன். அது எனக்கு பிடிக்கும். அதில் எந்த சிரமமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
அதோடு நிற்காமல், "என்னிடம் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஆனாலும் போன் பில் கட்ட வேண்டுமென்றால் கணவரிடம்தான் சொல்வேன். எனக்கு பணம் தேவைப்பட்டாலும் அவரிடம்தான் கேட்பேன். என்னிடம் பணம் இருந்தாலும் அவர் அனுப்ப வேண்டும் என்று நினைப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள்தான் தற்போது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
ஃபேன்டஸி
இதுகுறித்து விளக்கம் அளித்த சுவாசிகா, "நான் செய்யும் விஷயங்களை எல்லாரும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இது என்னுடைய வாழ்க்கை. எனக்கு இப்படித்தான் இருக்க பிடிக்கும். ஒருவேளை இது என் ஃபேன்டஸியாக கூட இருக்கலாம். ஆனால் அதை நான் என்ஜாய் பண்றேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "9 வயதிலிருந்தே சம்பாதிக்க ஆரம்பித்தேன். எல்லா விஷயங்களையும் நானே பார்த்துக்கொண்டேன். இப்போது கணவரை சார்ந்து இருப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு ரசிகர்கள் சொல்வது என்ன?
இந்த வீடியோ வெளியானதும் தமிழ்நாட்டு ரசிகர்கள் பலர் ஸ்வாசிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "இதுல ட்ரோல் பண்ண என்ன இருக்கு?", "குடும்ப வாழ்க்கையை எப்படி வாழணும் என்பது அவரவர் விருப்பம்", அவர் யாரையும் கட்டாயப்படுத்தலையே , கணவரை நேசிப்பது தப்பா?" என்ற கருத்துக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.
மலையாள ரசிகர்கள் ஏன் கோபம்?
மலையாள ரசிகர்களின் எதிர்ப்பு வேறு காரணத்திற்காக இருக்கிறது. "இப்போ தமிழில் சொல்வது வேற மாதிரி இருக்கு. அப்போ மலையாள பேட்டியில் சொன்னது வேற மாதிரி இருந்தது", "அப்போது வேறு விதமாக பேசி இப்போது கதையை மாற்றுகிறாரா?", "ட்ரோல் ஆன பிறகு வார்த்தைகளை மாற்றி பேசுகிறார்" என்று சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெட்டிசன்கள் விவாதம்
தற்போது சமூக வலைதளங்களில் ஸ்வாசிகாவின் இந்த பேட்டி தொடர்பாக இரண்டு தரப்பாக விவாதம் நடந்து வருகிறது. ஒரு தரப்பினர், "இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறுகின்றனர்.
மற்றொரு தரப்பினர், "பிரபலங்கள் பேசும் வார்த்தைகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்" என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
சில நெட்டிசன்கள் கிண்டலாக, "பேங்க் பேலன்ஸ் உங்களுடையது... பில் மட்டும் கணவர் கட்டணுமா?", "இது லவ் இல்லை... லக்சுரி", "Gen Z-க்கு இது புரியாது" என்று பதிவிட்டு வருகின்றனர். மற்றொருவர், "ஸ்வாசிகா சொல்வது பழைய காலத்து குடும்ப வாழ்க்கை இல்லை... அவருக்கு பிடித்த வாழ்க்கை முறை" என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ட்ரோலா? ஆதரவா?
ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை பற்றிய பேட்டி, இப்போது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் கலாச்சாரம், உறவு, தனிப்பட்ட சுதந்திரம் போன்ற பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஸ்வாசிகா கூறிய கருத்துக்கள் சிலருக்கு சர்ச்சையாக தெரிந்தாலும், சிலருக்கு அது அன்பின் வெளிப்பாடாக தெரிகிறது. அதனால்தான் அவரது ஒவ்வொரு பேட்டியும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஒருபுறம் ஆதரவு... மறுபுறம் விமர்சனம்... ஆனால் ஸ்வாசிகா மீண்டும் இணையத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!













Click it and Unblock the Notifications