தவெகவின் 6 மாத ஆட்சி அவலம்.. இனியாவது ஒத்துக்கொள்வீர்களா? நடிகை வினோதினி கேள்வி! வந்தாச்சு விவாதம்
சென்னை: தமிழக அரசியலில் இப்போது 6 மாத ஆட்சி குறித்த விவாதம் அதிகரித்து இருக்கிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நடிகையும் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பேசிவரும் வினோதினி பேசியிருக்கும் தகவல்கள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை வினோதினி பேச்சு
அவர் பேசுகையில், தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை நிலை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த காலகட்டத்தில் சீரழித்து இருப்பது இனியேனும் நேர்மையுடன் ஒப்புக்கொள்ளலாமா? தற்போதைய அரசு பெருமளவில் தடுமாறிக் கொண்டிருக்கும் உண்மையை தங்களின் பக்கசார்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் இனியேதும் ஒப்புக்கொள்வார்களா? பொறுப்பு ஏற்பு என்பது எங்காவது கொஞ்சமேனும் இருக்க வேண்டும் என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியிருக்கிறார்.
அதாவது ஒரு கட்சியை ஆதரிக்கிறோம் என்பதற்காக அந்த அரசு எடுக்கும் எல்லா முடிவுகளையும் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவருடைய பேச்சின் முக்கிய விஷயமே. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து மக்களிடம் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
மக்கள் கருத்து
விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றது. தேர்தலின் போது மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு அந்த மாற்றம் அன்றாட வாழ்க்கையில் தெரியவேண்டும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பு. ஆனால் ஆட்சி அமைந்த முதல் சில மாதங்களில் பல ஏமாற்றங்கள் இதுதான் கிடைக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆட்சி அமைந்த முதல் சில மாதங்களில் புதிய அரசு என்பதால் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தனர். அதனால இப்போ 6 மாதங்கள் கடந்து விட்டது. இப்போ அரசியல் செயல்பாடுகள் குறித்த விவாதமும் தீவிரமடைந்து வருகிறது.
கருத்து கணிப்பு
சமீபத்தில் வெளியான சவுத் ஃபர்ஸ்ட் (South first) கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 60.9% பேர் அரசு தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று கருத்து தெரிவித்ததாக அந்த ஆய்வு கூறியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக சில சர்ச்சைகளும் போய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தீபாவளி நாளில் மட்டும் நடந்த பல கொலைகளும் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில் தான் இப்போது நடிகை வினோதினி சொன்ன கருத்தும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் வினோதினி கருத்துக்கு ஆதரவாக கமெண்ட் கொடுக்கின்றனர். சிலர் வழக்கம் போல விஜய்க்காக வினோதினியை திட்டி கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications
