விஜய் டிவியில் டாப் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. காரணம் இதுதானா? இனி இவருக்கு பதில் அந்த நடிகை தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இன்றைய எபிசோடிலிருந்து புது நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார் அது யார் என்று பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் டிஆர்பிஐ பெறுவதற்காக பல புதியது புதியதாக சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஆரம்பத்தில் பிற மொழி சீரியல்கள் தான் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இப்போது அதிகமான தமிழ் சீரியல்கள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுபோல விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இளைஞர்கள் மத்தியில் எளிமையாக இடம் பிடித்து விடுகிறார்கள். காரணம் தற்போது உள்ள இளம் தலைமுறைகள் அதிகமானோர் விஜய் டிவி சீரியல்கள் பார்க்கிறார்கள். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் கலந்து கொள்வதால் அவர்கள் எளிதாக பலருக்கும் பிரபலமான நபர்களாக இருக்கிறார்கள்.
கெட்டி மேளம் சீரியலில் ஆரம்பமே அசத்தல்.. தொடங்கியது காதல் காட்சி! இன்றைய அப்டேட்
அந்த வகையில் விஜய் டிவியில் ஹிந்தி சீரியலில் ரீமேக்காக நீ நான் காதல் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் லப்பர் பந்து திரைப்பட நடிகை சுவாதிகாவின் கணவரும், நடிகருமான பிரேம் ஜாக்கோப் கதாநாயகனாக நடிக்கிறார்.
சீரியல் டீச்சரையே நிஜத்தில் திருமணம் செய்த விஜய் டிவி நடிகர்.. மணப்பெண் கூட இந்த சன் டிவி நடிகை தான்
இவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார். அதோடு இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷிதா ஸ்ரீதாஸ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், விஜே தனுஷிக் விஜயகுமார் உட்பட்ட பலர் நடித்து வருகின்றனர். நீ நான் காதல் சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு டிஆர்பியிலும் நல்ல இடத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கதாநாயகனின் அக்காவாக அஞ்சலி கேரக்டரில் விஜே தனுஷிக் நடித்து வந்தார். அவர் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். விஜே தனுஷிக்கும் அவருடைய காதலருக்கும் கடந்த நவம்பர் மாதத்தில் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. இவர்களின் திருமணம் கூடிய விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜே தனுஷிக் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை ஸ்வேதா அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். விஜே தனுஷிக் தமிழில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதோடு ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகத்தான் பிரபலமானார்.

இலங்கையை சேர்ந்த தனுஷிக் இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்தார். இலங்கையில் இருந்து தன்னுடைய நண்பர்களின் துணையோடு சென்னைக்கு வந்து இங்கு வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று இவர் விலகுவதற்கு காரணம் அவருடைய திருமணமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தனுஷிக்கு கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications