ஒரே நேரத்தில் மகிழ்ச்சியான செய்தியை கூறிய ஷபானா மற்றும் ரேஷ்மா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சின்னத்திரை நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு தாங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் ரசிகர்களோடு பகிர்ந்து உள்ளார்கள்.
செம்பருத்தி சீரியல் முடிவடைந்த வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஷபானாவின் லேட்டஸ்ட் அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

தோழிகளின் அடுத்தடுத்த திருமணம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக கதாநாயகியாக பலருக்கும் பரிச்சயமான ஷபானா மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் சீரியலை தாண்டியும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது தான் இவர்கள் இருவரும் திரை துறையில் இருக்கும் நடிகர்களை திருமணம் செய்துள்ளனர். ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல ரேஷ்மாவும் தொகுப்பாளரும் நடிகருமான மதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜீ தமிழ் நட்பு
நடிகைகளில் நட்பாக இருப்பது ஒரு சிலர்கள் தான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு நட்பாக இருக்கும் ஜீ தமிழ் நடிகைகளில் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா என ஒரு கூட்டணி எப்பொழுதும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரலானது. பல பெண்கள் இவர்களுடைய போட்டோக்களை தான் தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக கூட சாங் எடிட் பண்ணி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடைய நட்பு எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களைப் பற்றி பல வதந்தி செய்திகளும் பரவிக் கொண்டு இருக்கிறது.

முன்பு போல இல்லையே
நட்பு கூட்டணியில் சைத்ரா ரெட்டிக்கு முதலில் திருமணம் முடிந்தது. அப்போது மற்ற தோழிகள் எல்லோரும் சேர்ந்து அடித்த லூட்டி வேற லெவலில் வைரலாக பரவி வந்தது. அதற்கு பிறகு ஷபானா மற்றும் ஆரியன் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்தில் அந்த அளவிற்கு இவர்கள் லூட்டி அடித்து எடுத்த போட்டோக்கள் வெளியாகவில்லை. இவர்களைத் தொடர்ந்து தற்போது நட்சத்திராவும் சின்னத்திரையை சார்ந்த ஒருவரை எளிமையான முறையில் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இவர்கள் முன்பு போல போட்டோக்கள் வெளியிடவில்லை என்று இவர்களுடைய ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதிய திரைப்படத்தில் கூட்டணி
நால்வர் கூட்டணியில் தற்போது ஷபானா மற்றும் ரேஷ்மா மற்றும் ஒன்றாக சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இவர்கள் இருவரும் 'பகையே காத்திரு' எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் கமிட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். அதுபோல இந்த திரைப்படத்தில் இவர்கள் ஒரு சில சீன்களில் நடித்தாலும் நட்பை மேருகேற்றும் விதமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்று கூறி வருகிறார்கள். எப்படியோ சின்னத்திரையிலே மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் வெள்ளித்திரையிலும் காலடி எடுக்க எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்கள். இது இவர்களுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதானாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications