பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்கிரமனை கட்டிபிடித்து ஏடிகே சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் பாராட்டு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு விக்ரமனை கட்டிப்பிடித்து ஏடிகே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது ஏடிகே விக்ரமனை கண்டு கொள்ளவில்லை என்று எழுந்த கருத்துகளுக்கு தற்போது பதில் கூறியிருக்கிறார்.
விக்ரமன் வின்னர் இல்லை என்று தெரிந்ததும் மேடையில் அதிர்ச்சியோடு ஏடிகே நின்று கொண்டு இருந்தார்.

எதிர்பாராத நிகழ்வு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் டைட்டில் ஜெயித்திருக்கிறார். விக்ரமன் ரன்னராக வந்திருக்கிறார். ஷிவின் இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்திருக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டி இருந்த விக்ரமன், ஷிவின், அசீம் மூவரில் ரசிகர்கள் அதிகமானோர் விக்ரமன்தான் டைட்டில் ஜெயிப்பார் என்று கூறிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய பல போட்டியாளர்களும் விக்ரமன் ஜெயிக்க வேண்டும் என்று தங்களுடைய ஆசைகளை கூறிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் ஒருவராக ஏடிகேயும் இருந்து வந்தார்.

நட்பும் சண்டைகளும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஏடிகே ஆரம்பத்தில் அசீம் உடன் நட்பாக பழகி வந்தார். பிறகு பொம்மை டாஸ்க்கில் அசீமிற்க்கு ஆதரவாக ஏடிகே பேசியது பின்பு அவருக்கு வினையாக மாறியதால் அதற்கு பிறகு அசீமுடன் தனது நட்பை குறைத்துக் கொள்ள தொடங்கினார். அதற்கு பிறகு ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அசீம் மற்றும் ஏடிகே இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சண்டைகளும் நடந்தன. ஆனாலும் சிறிது நேரத்திற்கு பிறகு அசீம் ஏடிகே விடம் மன்னிப்பு கேட்டு இருவரும் மாறி மாறி பாச மழைகளைப் பொழிந்து கொண்டிருந்தனர்.

விக்ரமனை கண்டு கொள்ளவில்லை
என்னதான் அசீம் மன்னிப்பு கேட்டாலும் பல நேரங்களில் அவருடைய கேரக்டர் மாறாமல் மீண்டும் மீண்டும் அதே நடந்து வருவதை குறித்து ஏடிகே அசீமுடைய முகத்திற்கு முன்பும் அசீம் இல்லாத இடத்திலும் கூட பலமுறை அவரை கிண்டல் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள விக்ரமனுடைய சப்போர்ட் ஏடிகே விற்கு பெரிய அளவில் நட்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் அந்த அளவிற்கு பாண்டிங் இல்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் நட்பாக மாறி இருந்தனர். இந்த நிலையில் ஏடிகே வெளியே செல்லும்போது அனைவரையும் கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறிய ஏடிகே விக்ரமன் அருகில் சென்ற பிறகும் அவரை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

தெரியாமல் நடந்தது
ஆனால் அது குறித்து வெளியே வந்ததும் முதல் பதிவாக நான் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்ததால் அது எப்படி எனக்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் வேண்டும் என்று விக்ரமனை ஒதுக்கவில்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார். அது மட்டும் இல்லாமல் விக்கிரமன் ஒரு சிங்கம் அவர் ஒரு சிங்கம் என்பது தெரியாமலே நான் அவர் அருகில் ஒரு முயலாக இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறேன். அவருடைய அறிவுக்கு அவர் வேற லெவல் என்று புகழ்ந்து பதிவையும் வெளியிட்டு இருந்தார். பேட்டிகளிலும் விக்ரமன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையையும் கூறியிருந்தார்.

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை
இந்த நிலையில் நேற்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரம் வந்தது. ஆரம்பத்தில் விக்ரமன், ஷிவின்,அசீம் மூவரும் மேடையில் ஒன்றாக அறிமுகமானார்கள். முதலில் ஷிவின், ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார். பிறகு விக்ரமன் மற்றும் அசீம் இருவர் மட்டுமே மேடையில் இருக்கும் போது கூட அனைவரும் விக்ரமன் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கமல் அசீம் உடைய கையை தூக்கி அவர் வின்னர் என்று அறிவித்ததும் அனைத்துப் போட்டியாளர்களும் ஆர்ப்பரித்து கைதட்டி இருந்தாலும் ஏடிகே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அனைவரும் அமர்ந்த பிறகும் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

ஏடிகேவின் எதிர்பாராத செயல்
முகத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் காட்ட முடியாத அதிர்ச்சியில் இருந்த ஏடிகே அடிக்கடி கேமரா சூம் செய்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு விக்ரமனை தனியாக சந்தித்து கட்டிப்பிடித்து தன்னுடைய நட்பை காட்டி இருக்கிறார். நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும்போது எதுவும் நினைக்கவில்லை, அதனால் இப்போது இவரை கட்டிப்பிடித்துக் கொள்கிறேன் என்று முத்த மழைகளைப் பொழிந்து தன்னுடைய அன்பை காட்டி எப்போதும் எங்களுடைய நட்பு தொடரும் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications