காதலுக்கு அடிமையான மாப்பிள்ளை தான் வேண்டும்..அக்ஷராவின் திருமண ஆசை..அலைமோதும் ரசிகர்கள்
சென்னை: தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷராவின் ஆசையை கேட்டு ரசிகர்கள் ஆர்பரித்து வருகின்றனர்.
இந்தியாவின் சார்பாக பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அழகியின் திருமண ஆசை இவ்வளவு தானா என்று ரசிகர்கள் பலர் மனக்கோட்டை கட்டி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா தொடங்கியிருக்கும் மேட்ரிமோனியனுக்கு ரசிகர்கள் பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

ஐந்தாவது சீசன் தொடக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசனில் அமோகமான ரசிகர்களின் வரவேற்போடு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் இளைஞர்கள் பட்டாளம இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது காரணம் இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் இப்பே அதிகமான மாடல் அழகிகள் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. அதனாலேயே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதற்கு முன்பு சீசன்களில் பார்க்காத ரசிகர்கள் கூட தற்போது இந்த சீசனை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

அழகான சிரிப்பு அழகி
இதுவரைக்கும் உலக அளவில் பெயர் பெற்றிருந்த அக்ஷரா தற்போது முதல்முறையாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார். இவருக்கான இடத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொடுத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பலர் புதுமுகங்களாக இருந்தாலும் இதில் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கின்றனர். அதில் அக்ஷராவும் ஒருவராக இருக்கிறார். அவருடைய அழகான சிரிப்பு பலருக்கும் ஃபேவரைட் ஆக மாறிவிட்டது. இவர் தன்னுடைய கதையை கூறி போட்டியாளர்களிடம் அதிகம் லைக் பெறாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வாக்குகளை பெற்று விட்டார்.
Recommended Video

வைரலாகும் போட்டோஸ்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் கலகலப்பாகவும் ஜாலியாகவும் சென்று கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் போர் அடித்து விடுகிறது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் அக்ஷராவை அடிக்கடி காட்டுங்கள் என்று அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களிடம் பிரபலமாகாமல் இருந்த இவர் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறார். அவருடைய பழைய போட்டோக்கள் கூட இப்போது வைரலாக சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இவருடைய கதையை கேட்டு ராஜு இவருக்கு லைக் கொடுத்ததற்காக பலர் அவரை குறை கூறிக் கொண்டிருந்தற்காக இவர் தேம்பித் தேம்பி அழுதது ரசிகர்களுக்கு பெரிய மன வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம்.

அக்ஷராவின் எதிர்பார்ப்பு
சில நேரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்கள் சுவாரசியமாக ரசிகர்களுக்கு மாறிவிடுகிறது. அந்த மாதிரிதான் நேற்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து இருப்பதை பிரியங்காவிடம் கூறியிருக்கிறார். இதுதான் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பிரியங்கா உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டதற்கு கொஞ்சம் உயரமானவராகவும், என் மீது அதிக பாசமும் சில நேரங்களில் அடிமையாகவும், காதல் அடிமையாகவும் இருந்தால் ரொம்பவே பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த வார்த்தையை கேட்டதும் ரசிகர்கள் பலர் நாங்க வருகிறோம், நாங்க இருக்கிறோம் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications