வெளியே வந்த ஒரே நாளில் பிரம்மாண்டமாக மீட்டிங் போட்ட பிக் பாஸ் பிரபலங்கள்
சென்னை: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷரா, வருண் செய்த செயல்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது.
பல நாட்களுக்குப் பிறகு மதுமிதாவை பார்த்ததும் ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த அணியில் இன்னும் சிலரை காணவில்லையே என்று ரசிகர்களின் கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன.

எதிர்பார்க்காத வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி இருந்தாலும் கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக அக்ஷரா மற்றும் வருண் வெளியேற்றம் பலருடைய மனதையும் பாதித்து இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இவர்கள் வெளியேறி விட்டார்கள் என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கி பெர்ரியின் செயல்
நிகழ்ச்சியில் இருக்கும் போது மட்டும் தான் நாங்கள் நண்பர்கள் அல்ல வெளியே வந்தாலும் அப்படித்தான் என்று தற்போது பிக்பாஸ் பிரபலங்கள் நிரூபித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த ஐக்கி பெர்ரி ஏற்கனவே அனைத்து போட்டியாளர்களின் வீட்டுக்கும் சென்று செல்பி வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி கொண்டிருக்கும்போது அதே வேலையை, தற்போது வெளியான அக்ஷரா, வருண் மற்றும் மதுமிதா செய்திருக்கின்றனர்.

ரசிகர்களின் கேள்வி
அக்ஷராவும், வருணும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகின்றது. அதற்குள் இவர்கள் எப்படி மீண்டும்
மீட்டிங் போட்டு விட்டார்கள் என்று பலர் குழம்பி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இவர்கள் அணியில் மதுமிதா சேர்ந்து இருப்பதால் அப்போ மது சென்னையில்தான் இருந்துகொண்டு இருக்கிறாரா? ?என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் கடைசி வாரத்தில் அனைவருக்கும் திடீரென்று என்ட்ரி கொடுப்பதுபோல கலந்துகொள்வதற்காக மதுமிதா வந்துள்ளாரா??என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

சந்தேகங்களைக் கிளப்பும் ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதுதான் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால் வெளியே வந்த பிறகும் இவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள். இது உண்மையில் நட்பு தானா??அல்லது அதற்கும் மேலா??என்று ஒரு சிலர் கேள்விகளால சந்தேகங்களை கிளப்புகிறார்கள். ஆனால் அக்ஷராவின் தீவிரமான ரசிகர்கள் நட்பு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். எப்படியோ சமூகவலைத்தளத்தில் தற்போது பிக்பாஸ் பிரபலங்களின் மீட்டிங் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications