Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இல்லத்தரசி ஆல்யா மானசா.." மகளுக்கு ஊசி போட்டா அம்மாவுக்கு வலிக்குதாம்!

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட டிவி சீரியல் ஹீரோயின் ஆல்யா மானசா இப்போது முழுநேர இல்லத்தரசியாகவே மாறிவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஆல்யா மானசா குழந்தைகளுக்காக தற்போது நடிப்புக்கு தற்காலிகாகமாக முழுக்கு போட்டிருக்கிறார். சீரியல் நடிப்பில் இருந்து விலகிய பிறகு தற்போது முழு நேர இல்லத்தரசியாகவே மாறி விட்டார்.

நடன நிகழ்ச்சியில் திறமை காட்டினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சின்னக் கண்களில் க்யூட் எக்ஸ்பிரசன்களை காட்டி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ஆல்யா மானசா. அவரது கணவர் சஞ்சீவ் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்தவர்.

ரீல் ஜோடிகளாக வலம் வந்த இருவரையும் இணைத்து வைத்தது டிவி சீரியல். திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாகவும் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

சஞ்சீவ் ஆல்யா

சஞ்சீவ் ஆல்யா

டிவி சீரியல் நடிப்பு போக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் தங்களின் வீட்டில் நடப்பதை இன்ஸ்டா பக்கத்திலும் யுடுயூப் சேனலிலும் பதிவிட்டு வருகின்றனர். முதல் குழந்தைக்காக நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க ஆல்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ராணி 2 சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.

டிவி சீரியலில் பிஸி

டிவி சீரியலில் பிஸி

சஞ்சீவ் விஜய் டிவி சீரியலில் வேறு சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடியவே, சன் டிவியில் கயல் சீரியல் மூலம் எழில் ஆக நடித்து வருகிறார். இந்த சீரியலும் இப்போது டிஆர்பியில் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. விருது கூட வாங்கி விட்டார் சஞ்சீவ். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகைகள் பட்டாளம் உள்ளது.

சின்னதாக ஒரு பிரேக்

சின்னதாக ஒரு பிரேக்

ஆல்யா மீண்டும் கர்ப்பமானாலும் பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். கடந்த மாதம்தான் அவருக்கு பையன் பிறந்தது. அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆல்யா மானாசா. பையனுக்கு அர்ஸ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிள்ளைகளுக்கு தடுப்பூசி

பிள்ளைகளுக்கு தடுப்பூசி

சீரியலில் நடித்த நேரம் போக மனைவி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடும் சஞ்சீவ் தனது இரண்டு குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார். அதைத்தான் தற்போது யுடூயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகள் ஐலாவிற்கும் மகன் அர்ஸ்க்கும் ஊசி செலுத்த அழைத்துக்கொண்டு போன போது மகளின் செல்ல விளையாட்டுக்களையும் பதிவு செய்துள்ளார் சஞ்சீவ்.

தாய்மையின் பூரிப்பில் ஆல்யா

தாய்மையின் பூரிப்பில் ஆல்யா

அப்போது தாய்மையின் பூரிப்பில் உள்ள ஆல்யா மானசா மகளோடு விளையாடிக்கொண்டு முழு இல்லத்தரசியாகவே மாறி விட்டார். சற்றே பூசினார் போல இருக்கிறார் ஆல்யா. ஐலாவிடம் விளையாடிக்கொண்டே வந்தாலும் சொய்ங்க் என்று ஊசி போட போறோம் என்று சொல்கிறார் ஆல்யா. ஆனால் அதை ஐலா சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

அம்மாவின் வலி

அம்மாவின் வலி

கடைசியில் டாக்டரிடம் போய் பேசி விட்டு ஊசி போடும் போதுதான் குழந்தை கத்த ஆரம்பிக்க அம்மாவிற்கு மனது வலித்து விட்டது. காரில் வரும் போது ஜாலியாக விளையாடிக்கொண்டே வந்த ஐலா கடைசியில் அழுகையோடு வீட்டிற்கு கிளம்பி போனார். குழந்தையை சமாதானப்படுத்த கடும் சிரமப்பட்டு விட்டார் ஆல்யா.

Recommended Video

    Bharathi Kannamma சீரியலில் இருந்து விலகும் Arun, இனி பாரதியாக வரபோறது யார் தெரியுமா?
    ரசிகர்கள் பாராட்டு

    ரசிகர்கள் பாராட்டு

    என்னதான் சீரியலில் தைரியமான சுட்டித்தனமான பெண்ணாக நடித்தாலும் பிள்ளைகள் பெற்ற பின்னர் முழு நேர இல்லத்தரசியாக பொறுப்பான அம்மாவாகவே மாறி விட்டார் ஆல்யா. இந்த யுடுயூப் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆல்யா, சஞ்சய் ஜோடிக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    அப்பாவிற்கு மசாஜ்

    ஒருவழியாக சமாதானமாகி வீட்டு வந்த பிறகு அழுகையை நிறுத்திய ஐலா அப்பாவிற்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து விட்டார். அப்பா சஞ்சீவின் சாக்ஸ்ஐ கழற்றி விட்டு பாத மசாஜ் செய்து விட்டு மகளதிகாரமாக மாறி விட்டார். குடும்பமே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கும் நிலையில் அவர்களது யூடுயூப் சேனலில் வெளியான வீடியோக்களை பார்த்து க்யூட் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+