பாவனி, அமீர் திருமணத்தை பற்றி அஷ்ரப் வெளியிட்ட தகவல்... இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கலையே..!!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமான பாவனி மற்றும் அமீருடைய திருமணத்தை பற்றி அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாவனி, அமீரின் காதலை ஏற்றுக் கொள்வாரா?? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பாவனியின் பதில் மகிழ்ச்சியை கொடுத்து இருந்தாலும் தற்போது திருமணம் எப்போது என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கிளம்பி கொண்டிருக்கிறதாம்.
பாவனி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டதை ஒரு நாளிதழ் வெளியிட்டு இருப்பதை பார்த்து அஸ்ரப், இவர்களுக்கு திருமணம் செய்ய சிறந்த மாதம் எது?? இது தேசிய செய்தியாக இருப்பதால் தாமதம் செய்ய முடியாது..என்று கலாய்த்து இருக்கிறார்.

ரசிகர்களின் ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நிகழ்வு ரசிகர்களால் மறக்க முடியாத மாதிரி நடந்து விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது நடந்து முடிந்த ஐந்தாவது சீசனில் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கின்றனர். இந்த ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்த பாவனி ரெட்டிற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த சீசனில் முதல் ஆளாக ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டது பாவனிக்கு தான். சின்னத்திரை நடிகையாக பலருக்கும் பரீட்சைகளும் ஆகிய இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பாவனின் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

புதிய காதல் ஜோடி
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அமீர் உள்ளே நுழைந்ததும் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு பக்கம் தாமரையுடன் அமீர் நன்றாக பழகினாலும் ஆரம்பத்தில் அவரைப் பற்றி தன் மனதில் நினைத்ததை எல்லாம் வெளிப்படையாக ஒவ்வொரு பேட்டி போட்டியாளர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஒரு சில தாமரையின் ரசிகர்கள் அமீரை திட்டி தீர்த்து வந்தனர். இந்த நிலையில் பாவனியை தான் காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார். அதிகமாக கேரிங் எடுத்து பாவனியை அமீர் பார்த்துக் கொண்டதை பார்த்து ரசிகர்கள் சிலர் வயிறு எரிந்தாலும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

காதலை கூறிய பாவனி
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் மூன்றாவது வெற்றியாளராக பாவனி வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அமீர் மற்றும் பாவனி இருவரும் கலந்து கொண்டனர். இதில் பாவனிக்கு பெரிய அளவில் டான்ஸ் ஆட வராது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஆனால் அவரையும் வேற லெவல் டான்ஸ் ஆட வைத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக இவர்கள் இருவரும் மாறி இருந்தனர். தான் வெற்றி பெற்ற தருணத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடும் தனக்கு வெற்றி வகையை சூட காரணமாக இருந்த அமீரிடமும் பகிர்ந்து இருந்தார். அப்போது தான் அமீர் உடைய காதலை ஏற்றுக் கொண்டதாகவும் என்னுடைய வாழ்க்கையில் நீண்ட நாட்களில் எனக்காக இருப்பாயா என்று தன் காதலை கூறியிருந்தார்.

அஷ்ரப் கேள்வி
சமூக வலைத்தளத்தில் பாவனி, அமீர் காதல் செய்திகள் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது அதைப்பற்றி அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், இவர்களுக்கு திருமணம் செய்ய சிறந்த மாதம் எது?? இது தேசிய செய்தியாக இருப்பதால் தாமதம் செய்ய முடியாது..அரே பிரியாணி பாய்..நீங்க எப்போ ஃப்ரீயா இருக்கீங்க.!!?? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நவம்பர் மாதம் வைத்துக் கொள்ளலாம். பாவனியின் பிறந்த நாளில் திருமணத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அப்போ விரைவில் திருமணம் இருக்குமா என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications