சமுதாயத்துக்கு தேவையான புரட்சி செய்த பிரபல சீரியல்.. ஆனால் இதை கவனித்தீர்களா? ரசிகர்கள் பாராட்டு
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியின் சீரியலில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் புரட்சிகரமான பிரமோ வெளியாகி இருக்கிறது.
கணவரை இழந்த பெண் சுப காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று சிலர் பேசுவதை தட்டிக் கேட்கும் விதமாக இந்த பிரமோ இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெற்றி பெற்று வரும் சீரியல்களின் சாயலில் இந்த சீரியலும் இருந்து வருவதாக சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாரதிகண்ணம்மா சீரியலில் அறிமுகம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமிையும் சீரியல் ஜூலை நான்காம் தேதி 2022ல் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியலின் கதாநாயகியாக கண்மணி மனோகரன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் அஞ்சலியாக நடித்து வந்தார். இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் வெளியே தெரிய ஆரம்பித்த நேரத்தில் தான் இந்த சீரியல் இருந்து இவர் திடீரென விலகி இருந்தார். தனக்கு முதன்மையான கேரக்டர் கிடைத்திருப்பதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த நிலையில் தற்போது அவர் நடிக்கும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருந்து வருகிறார்.

தாலி மாற்றும் பங்க்ஷன்
கண்மணி மனோகரன் அமுதாவாக நடித்து வருகிறார். இவர் அன்னலட்சுமி ஆக நடிக்கும் ராஜேஸ்வரியின் மனதை கவர்ந்த மருமகளாக இந்த சீரியலில் கண்மணி அதாவது அமுதா இருந்து வருகிறார். தன்னுடைய வீட்டில் படிக்காததால் இவர் அதிகமாக அவமானங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகன் செந்தில் தான் ஒரு ஆசிரியர் என்று தன்னுடைய அம்மாவை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதே பொய்யை சொல்லி அமுதாவையும் திருமணம் செய்து இருக்கிறார். தற்போது திருமணத்திற்கு பிறகு அமுதா தன்னுடைய கணவர் செந்திலை வாத்தியார் ஆக்கி விட வேண்டும் என்று பல கஷ்டங்களை தாண்டி போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அமுதாவிற்கு தற்போது ஊர் அறிய தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது.

புரட்சிகரமான சிந்தனை
அமுதாவுக்கு நடக்கும் பங்க்ஷனில் கணவரை இழந்து நிற்கும் அன்னலட்சுமி கலந்து கொள்ள கூடாது என்று அமுதாவின் அண்ணி திட்டுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத அமுதா பெண் கணவனை இழந்தால் ஏன் பூவும் பொட்டும் வைக்க கூடாது. கணவர் இறந்து விட்டால் அவர் கட்டிய தாலியை வேணும் என்றால் கழட்டிக் கொள்ளலாம், ஆனால் சிறுவயதிலிருந்து நம்முடைய அம்மா நமக்கு வைத்து அழகு பார்த்த பூவையும் பொட்டையும் எதற்காக இழக்க வேண்டும் என்று கூறி மேடையிலே தன்னுடைய மாமியாருக்கு நெற்றியில் பொட்டு வைத்து, பூ வைத்து அழகு பார்ப்பார். இந்த பிரமோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் இப்போதும் இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகளும், மூடநம்பிக்கைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு இது ஒரு முன் உதாரணம் என்று பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மாற்றம் வர வேண்டும்
அமுதாவும் அன்னலட்சுமியின் சீரியல் என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சீரியலாக இருந்தாலும் இந்த சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் போன்று இருப்பதாகவும் அந்த சீரியலின் கதையை மாற்றி காப்பி அடித்து இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் பெரிய அளவில் அமுதாவும் அன்னலட்சுமிவும் சீரியல் வெளியே தெரியாமல் இருந்தாலும் இப்போது புரட்சிகரமான இந்த பெண்களுக்கு ஆதரவான இந்த ஒரு ப்ரோமோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்து பாராட்டும் பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரி சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications