அய்யனார் துணை அப்டேட்: வானதியால் சேரன் குடும்பத்துக்கு வரும் பிரச்சனை! நிலா எடுத்த நல்ல முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial Feb 20 Episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில், வீட்டை மீட்ட சந்தோஷத்தில் இருந்த நடேசன் குடும்பத்திற்கு பொங்கல் பண்டிகையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று நிலா சில கண்டிஷன் போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் வானதி பாண்டியன் கல்யாண பேச்சும் தொடங்கி இருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

அய்யனார் துணை நேற்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் நடேசனின் வீட்டை அவரது அண்ணன் போலீசில் புகார் கொடுத்து சீல் வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உயில் நடேசன் பெயரில் இருப்பதை தெரிந்து கொண்ட நிலா, சோழனின் உதவியுடன் வீட்டுக்குள் ஏறி குதித்து அந்த உயிலை எடுத்து போலீசிடம் காட்டி வீட்டை மீட்டுள்ளார்.
வீட்டை மீட்டதையடுத்து குடும்பத்தினர் மீண்டும் அங்கே குடியேறி வேலைகளை தொடங்குகின்றனர். இதை ஒளிந்து பார்த்த நடேசனின் அண்ணனை வம்பிழுத்து, அவர் முன்னிலையில் ஆட்டம் போட்ட நடேசன், தன்னுடைய மகன்களையும் கூப்பிட்டு அவர்களையும் ஆடவைத்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
அய்யனார் துணை இன்றைய எபிசோடு
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடின் (Ayyanar Thunai serial today episode) ஆரம்பத்தில், நடேசனுடன் சேர்ந்து சோழன், பாண்டியன், பல்லவன் என எல்லோரும் பெரியப்பாவை கலாய்த்து டான்ஸ் ஆடி அனுப்புகின்றனர். அதற்கு பிறகு பொங்கல் கொண்டாட்டம் குறித்து குடும்பத்தினர் பேசுகிறார்கள். "கடையில் போய் பொங்கல் வாங்கி வந்து சாப்பிட்டு தூங்கிடலாம்" என்று சோழன் சொல்ல, இந்த வருடம் அப்படி இல்லாமல் வீட்டிலேயே கிராண்டாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நிலா சொல்கிறார்.
ஷபானா உடன் பிரச்சனை.. பேசாமல் இருக்க இதுதான் காரணம்! வெளிப்படையாக பேசிய கயல் சீரியல் சைத்ரா
இதற்காக என்னெல்லாம் பொருட்கள் வாங்கலாம் என்று அவரே ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சோழன், "நீயும் நானும் போய் பொங்கலுக்கான பொருட்களை வாங்கிட்டு வரலாம்" என்று நிலாவிடம் கூறுகிறார். சோழனை விரும்பும் நிலா உடனே சம்மதிக்கிறார். இருவரும் காரில் சென்று கரும்பு, பொங்கல் பானை உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
மறுபுறம், மெக்கானிக் கடையில் பாண்டியன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது வானதி அங்கு வருகிறார். வழக்கம்போல் அவரை கிண்டல் செய்து பேசும் வானதி, பொங்கலுக்கு ஒரு கிஃப்ட் வாங்கித் தருமாறு கேட்கிறார். அதற்கு பாண்டியன் "என்ன வாங்கித் தரணும்?" என்று கேட்க, "கிஃப்ட் நீயே வாங்கித் தரணும்" என்று வானதி சொல்கிறார். அதற்கு நக்கலாக "கரும்பும் பொங்கல் பானையும் வாங்கித் தரட்டுமா?" என்று பாண்டியன் கேட்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வானதியின் தாய்மாமா பார்த்துவிடுகிறார்.
பாண்டியனுக்கு திருமணம்
இதையடுத்து நேராக வீட்டுக்கு சென்ற தாய்மாமா, வானதியின் பெற்றோரிடம் இந்த விஷயத்தை பேசுகிறார். "அந்த பையன் நல்ல பையன் என்று நீங்களே சொல்றீங்க... அப்படியிருக்க அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிரலாமே" என்று அவர் கேட்கிறார். இதைக் கேட்டு வானதியின் அப்பா, அம்மாவும் பாண்டியனுக்கே வானதியை திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இதே நேரத்தில் சோழன் வாங்கிய பொங்கல் பொருட்களுடன் வீட்டுக்கு திரும்புகிறார். குடும்பத்தில் பொங்கல் கொண்டாட்டம் ஒரு பக்கம் உற்சாகமாக தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கம் பாண்டியன் - வானதி திருமணப் பேச்சு வேகமாக முன்னேறும் திருப்பம் சீரியலில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications