பிறந்தநாளுக்கு குடும்பத்தினரிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்த அசீம்.. இவரை புரிஞ்சிக்கவே முடியலையே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் தன்னுடைய பிறந்தநாளில் சில சலுகைகளை செய்து தரும்படி பிக் பாஸ் இடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
அதிகமாக ரசிகர்கள் பட்டாளத்தோடு வலம் வரும் அசீம் திடீரென பிக் பாஸ் இடம் வைத்த வேண்டுகோளை பார்த்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களோடு அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் அசீம் வெளியே அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடைய முரட்டுத்தனமான கேரக்டரையும் அதிகமான ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர். இவர் என்னதான் டாஸ்க் விஷயத்தில் போட்டியாளர்களுடன் சண்டை இட்டு வந்தாலும் போட்டியாளர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாவதாக வந்து நிற்கிறார். அதனாலேயே இவரை ரசிக்கும் ரசிகர்கள் இவளுடைய ஸ்பெஷல் கேரக்டர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களாம்
ஒவ்வொரு வாரமும் தவறாமல் எலிமினேஷன் லிஸ்டில் வந்தாலும் வாக்கு முறையில் முதல் ஆளாக அசீம் தான் சேவ்வாகை விடுகிறார். வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தில் இருந்தாலும் தற்போது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை அசீம் நன்றாகவே புரிந்து கொண்டார். ஒவ்வொரு நாளும் அசீம் பேசும் வார்த்தைகளுக்கு அரங்கத்தில் இருக்கும் போட்டியாளர்கள் கைத்தட்டல் வைத்து அசீம் நேற்றைய எபிசோட்டில் கூட இங்கே என்னை எத்தனை பேர் பகைத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. என்னை ரசிக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் இடம் வேண்டுகோள்
அசீம் கேரக்டரை உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பலரும் முகத்துக்கு நேராகவோ அல்லது அவர் இல்லாத நேரத்தில் கூட கலாய்த்து கொண்டும் கருத்து தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளில் தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடைய சக போட்டியாளர்களுக்கும் மட்டன் பிரியாணி, தயிர் பச்சடி, இறால் தொக்கு, அல்வா என விதவிதமாக சாப்பாடுகளை தன்னுடைய வீட்டில் கேட்டு வாங்கி தர வேண்டும் என்று பிக் பாஸ் இடம் அசீம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்து
லைவ் நிகழ்ச்சியில் அசீம் தன்னுடைய தம்பியிடம் என் வீட்டில் இருந்து 25 பேர் சாப்பிடும் அளவில் மட்டன் பிரியாணி முதல் பல சாப்பாடுகளையும் அனுப்பி வைக்க சொல்லும்படி கேட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன மனுஷன் என்பதை கணிக்கவே முடியலையே. எல்லா போட்டியாளர்களும் இவரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாலும் இவர் அனைவருக்கும் விதவிதமாக சாப்பாடு வேண்டும் என்று ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று இவரை பாராட்டி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அசீம் ரசிகர்கள் பலர் அசீக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications