பாக்கியலட்சுமி: ராதிகாவிடம் கடைசியாக ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. தலைகுனிந்த கோபி! பாக்யா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 15ஆம் தேதிக்கான எபிசோடில் விவாகரத்து பெற்ற பிறகு கடைசியாக ஒரு முறை பாக்கியா வீட்டிற்கு கோபியோடு ராதிகா வருகிறார். அப்போது ஈஸ்வரி ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா, உங்க வீட்டுக்கு என்னை கடைசியாக ஒரு முறை கூட்டிட்டு போறீங்களா என்று கோபியிடம் கேட்டதும் கோபி ராதிகாவை காரில் கூட்டிக்கொண்டு வருகிறார். அப்போது நாம இனி சந்திக்கவே மாட்டோம்னு நினைச்சோம்.. ஆனா சந்திச்சோம்.... பேசிக்கிட்டோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... ஆனால் அதிலிருந்து இவ்வளவு சீக்கிரமா பிரிவோம்னு நினைக்கல.

Baakiyalakshmi Serial vijay TV

அதனால எந்த நேரத்தில் எது வேணாலும் நடக்குமோ அது நடக்கட்டும். இதை பத்தி இனிமே பேச வேண்டாம் கோபி என்று சொல்லிவிடுகிறார். பிறகு கோபி எமோஷனலாக பேசிக்கொண்டே வருகிறார். ஆனால் ராதிகா அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். பிறகு எதற்கு சிரிக்கிற என்று கோபி கேட்க, சும்மாதான் என்னுடைய ஃபேவரைட் காபி ஷாப் போயிடுச்சு என்று சொல்கிறார்.

உடனே கோபி காரை நிறுத்தி ராதிகாவிற்கு ஒரு கோல்டு காபி வாங்கி கொடுக்க, ராதிகாவும் சந்தோஷமாகக் குடிக்கிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டே பாக்யா வீட்டிற்கு வருகின்றனர். அந்த நேரத்தில் இனியாவும் ஈஸ்வரியும் கோபி போனை எடுக்க மாட்டேங்குறான் மனசு மாத்திக்கிட்டாங்களா... என்னன்னு தெரியலையே என்று பதட்டத்தில் இருக்கும்போது செல்வி வெளியே இவர்கள் இருப்பதை பார்த்து ஓடி வந்து வீட்டிற்குள் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி இனியாவிற்கு நடந்த அவலம்.. கதை என்றாலும் இப்படியா பண்ணுவீங்க? இதை கவனிச்சிருக்கலாமே!
இதனால் ஈஸ்வரி அதிர்ச்சியாகி மீண்டும் ராதிகா கோபியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டாளா என்று அதிர்ச்சியில் நிற்கிறார். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக பாக்யா வீட்டிற்கு வர, பாக்கியா அவரை அழைத்து உட்கார வைக்கிறார். அப்போது ராதிகா பாக்கியாவிடம் சமைச்சுட்டு இருக்கீங்களா? தெருமுனை வரைக்கும் உங்க வீட்டு சமையல் வாசம் வருகிறது என்று இயல்பாக பேசுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பிறகு ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து உங்கள் பையனை நான் பிரிக்க மாட்டேன். நீங்க பயப்பட வேண்டாம் என்று பேச, ராதிகாவிடம் ஈஸ்வரியும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது இருவரும் தாங்கள் செய்த தப்பு குறித்து பக்குவமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராதிகா இனி நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்ற வருத்தத்தில் கோபி ரூமிற்குள் தனியாக சென்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
அப்போது இனியாவிடமும் இனிமே உன் டாடியை நான் பிரிக்க மாட்டேன். அவர் உனக்கு மட்டும்தான் சொந்தம் என்று ராதிகா சொல்ல, இனியா கண் கலங்குகிறார். பிறகு அவரும் ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டு மயூவிற்கு ஒரு மேக்கப் செட் எடுத்து வந்து கொடுக்கிறார். கடைசியாக பாக்யா கையால் சாப்பிட வேண்டும் என்று ராதிகா சொல்ல, அவருக்கு பாக்யா உணவு பரிமாறுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபியையும் சாப்பிட கூப்பிட அவர் விருப்பமே இல்லாமல் வந்து சாப்பிட உட்காருகிறார். பிறகு எல்லாரும் சாப்பிடும் போது அமைதியாக இருப்பதை பார்த்து நான் உங்க வீட்டில் கவனித்து இருக்கிறேன் நீங்க சாப்பிடும்போது எல்லாரும் கலகலன்னு பேசிட்டே சாப்பிடுவீங்க. ஆனா இப்போ ரொம்ப அமைதியா இருக்கு என்று சொல்ல, அதற்கு பாக்கியா எழில், செழியன், அமிர்தா, ஜெனி என எல்லாரும் இருக்கும்போது ரொம்ப பேசிட்டே இருப்போம்.

Baakiyalakshmi Serial vijay TV

ஆனால் இப்போ அவங்க இல்லை அதனால் அமைதியா இருக்கு. நீங்க வரதாக சொல்லி இருந்தா நான் அவங்களையும் வர சொல்லி இருப்பேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா நான் இங்க வர்றது பற்றி திடீர்னு தான் முடிவு எடுத்தேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் கோபி மட்டும் சாப்பிடாமல் சாப்பாட்டை கிளறி கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+