பாக்கியலட்சுமி: ஈஸ்வரி ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ராதிகா.. கோபத்தில் கோபி, செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகாவை சந்தித்து ஈஸ்வரி பேசுகிறார். அப்போது ஈஸ்வரி ராதிகாவிடம் கோபியை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்க, அதற்கு ராதிகா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் கோபியும் கோபமாக ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் பல நாட்களுக்கு பிறகு ராதிகா கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார். அப்போது குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல் எல்லோரையும் ஏமாற்றி விட்டு ஈஸ்வரி ராதிகாவிடம் பேச போகிறார். அப்போது இருவரும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு நீ தனியா தானே இருக்க? என்று ஈஸ்வரி கேட்க, ராதிகா ஆமாம் என்று சொன்னதும், இப்போ இனியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, எழில் குடும்பம் சூட்டிங் எடுக்க கோவா போயிருக்கிறான் என்று பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா எல்லாமே சொல்லி இருக்காங்க என்று ராதிகா சொல்கிறார்.

மீண்டும் கல்யாணம்
சரி நான் விஷயத்துக்கு வரேன் என்று என் பையனை நினைச்சு எனக்கு இப்போ கவலையா இருக்கு, அவன் தனியா ரூம் எடுத்து தங்கி இருக்கிறான். அவனுக்கு பேச்சுத் துணைக்கு கூட ஆள் கிடையாது என்று ஈஸ்வரி சொல்ல, பாக்யா கூட தான் தனியா இருக்காங்க என்று ராதிகா கேட்டதும், நீ தப்பா நினைச்சுக்காத நீ திரும்பவும் கோபி கூட சேர்ந்து வாழுறியா என்று ஈஸ்வரி கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
ஈஸ்வரி சொன்ன வார்த்தை
உடனே யோசிக்காமல் நான் என் வாழ்க்கையில் இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கேன் அந்த நிம்மதி மீண்டும் கெட்டுப் போக நான் விரும்பல என்று ராதிகா சொல்ல, அப்போ கோபி கூட வாழ்வது உனக்கு நிம்மதி இல்லையா? என்று ஈஸ்வரி கேட்க, ஆமாம் என்று ராதிகா சொல்லிவிடுகிறார். இதுக்கு முன்பு உனக்கு நான் தான் தொந்தரவாக இருந்தேன். இப்ப நானே சொல்லுறேன் நீ கோபி கூட சந்தோஷமா வாழலாம் என்று சொல்ல, இனி நான் என்னுடைய முடிவில் இருந்து மாறவே மாட்டேன் என்று ராதிகா சொல்கிறார்.
ராதிகாவின் பதிலடி
அதற்கு ஈஸ்வரி நீ உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. நீ கொஞ்சம் யோசிச்சிட்டு போன் பண்ணு என்று ஈஸ்வரி செல்ல, திருப்பி கோபி விஷயத்துக்காக போன் பண்ணவே மாட்டேன் என்று ராதிகா சொல்லிவிடுகிறார். பிறகு ஈஸ்வரியும் அங்கிருந்து கிளம்பி வருகிறார். அடுத்த கொஞ்சம் நேரத்தில் கோபி அங்கு வருகிறார். அப்போது ராதிகாவிடம் நான் நலம் விசாரித்து வட்டு இப்போ நீ ஸ்லிம்மாகிட்ட அழகா இருக்க, காலேஜுக்கு இருந்த மாதிரி இருக்க என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கும் போது ராதிகா இப்ப மனசு நிம்மதியா இருக்கேன், அதனால உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்கிறேன், அதனால் தான் இந்த மாற்றம் என்று சொல்லிவிட்டு பிறகு ஈஸ்வரி வந்த விஷயத்தை பற்றியும் ஈஸ்வரி கோபி உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட விஷயத்தை பற்றியும் ராதிகா சொன்னதும் கோபி கோபம் ஆகிறார்.
கோபத்தில் கோபி
பிறகு ஈஸ்வரிக்காக ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கோபமாக வீட்டிற்கு வருகிறார். ஈஸ்வரியிடம் நீங்க எங்க போயிட்டு வந்தீங்க என்று கேட்க, ஈஸ்வரி வழக்கம் போல பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு கோபி என்கிட்ட ராதிகா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா என்று சொன்னதும் உன்கூட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்லிட்டு நான் பேசின விஷயத்தை மட்டும் உன்கிட்ட சொல்லி கொடுத்துட்டாளா? என்று கோபப்பட அதற்கு நீங்க பேசுனது தான் தப்பு என்று கோபி கோபபட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிஞ்சிருக்குமோ என்று கோபி பதறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications