பாக்கியலட்சுமி: பாக்யாவிற்காக இனியா எடுத்த முடிவு.. போனில் கோபி கண்ட காட்சி.. அதிர்ச்சி கொடுத்த சுதாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோட் பாக்யாவை பழிவாங்க இனியாவை பெண் கேட்டு சுதாகர் கோபியிடம் பேசுகிறார். அதே நேரத்தில் இனியா பாக்யாவிற்காக முக்கிய முடிவு எடுக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சுதாகர் வீட்டிற்கு வந்து மிரட்டிட்டு போனது பற்றி அமிர்தா மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சுதாகர் பற்றி அமிர்தா போனில் செக் பண்ண அவர் பல ரெஸ்டாரன்ட் வைத்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அது பற்றி பாக்கியாவிடம் அமிர்தா சொல்கிறார். அவருக்கு நிறைய ரெஸ்டாரண்ட் இருப்பதால்தான் நம்முடைய ரெஸ்டாரண்டையும் வாங்க வேண்டும் என்று அவர் இப்படி துடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இவர்கள் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என்று அமிர்தா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியா கேட்ட கேள்வி

அந்த நேரத்தில் இனியா வீட்டிற்குள் வருகிறார். யார் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறீங்க என்று கேட்க, அதற்கு பாக்கியா உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டதும் அமிர்தா நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது இனியா அவருடைய டீடெயில்ஸ் கொடுங்க நான் ரிப்போர்ட் கலெக்ட் பண்றேன் என்று கேட்க, அதற்கு பாக்கியா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

ஃபீல் பண்ணிய பாக்யா

என்னால் முடிந்த அளவிற்கு நான் பார்க்கிறேன். முடியாத பட்சத்தில் உன்கிட்ட சொல்லுறேன் என்று சொல்கிறார்கள். பிறகு இனியாவிடம் அடுத்ததாக என்ன பண்ண போறே என்று பாக்யா கேட்க, அதற்கு வேலையில் பெர்மனென்ட் ஆகணும் அப்புறம் எடிட்டர் ஆகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மேற்கொண்டு நீ படிக்கலையா என்று பாக்கியா கேட்க அதுதான் ஒரு டிகிரி முடிச்சாச்சே போதாதா? என்று இனியா கேட்கிறார்.

இனியா எடுத்த முடிவு

எனக்கு கல்யாணம் முடியும் போது என்னுடைய பெயருக்கு பின்னாடி எந்த படிப்பும் போடல. ஆனா உங்க அப்பா பெயருக்கு பின்னாடி எம்பிஏ போட்டிருந்தது. நான் என் பேருக்கு பின்னாடி எந்த படிப்பும் இல்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன். அதனால் நீ இன்னொரு டிகிரி படிக்கணும் என்று சொல்ல இனியா எனக்காக இல்லனாலும் உனக்காக கண்டிப்பா படிக்கிறேன் அம்மா என்று சொல்ல பாக்கியா சந்தோஷப்படுகிறார்.

கோபப்பட்ட ஈஸ்வரி

மறுபக்கத்தில் கோபியும் செழியனும் மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி என்கிட்ட காட்டல என்று கோபப்படுகிறார். பிறகு அவரிடம் ஒவ்வொரு மாப்பிள்ளை பற்றி சொல்லவும் ஈஸ்வரி வேண்டாம் என்று மறுத்துக் கொண்டே இருக்கிறார். பிறகு தரகரிடம் சொல்லலாம் இல்லை என்றால் நாளைக்கு இன்னும் இதில் நிறைய போட்டோஸ் இருக்கு அதை எல்லாம் பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்வி சொன்ன வார்த்தை

அந்த நேரத்தில் கோபியின் நண்பன் செந்தில் போன் பண்ணி ஒரு இடத்திற்கு வர சொல்கிறார். அடுத்ததாக பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் நல்ல கூட்டமாக இருக்கிறது. பாக்கியா அதைப் பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி அந்த ஆளு உன்னை வீட்டில் வந்து மிரட்ட வந்துட்டாராமே? இது பற்றி போலீசில் கம்பளைண்ட் கொடுக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கோபிக்கு இன்ப அதிர்ச்சி

மறுபக்கத்தில் கோபி நண்பன் சொல்ல இடத்திற்கு வந்து என்னடா நம்ம வழக்கமா சந்திக்கிற இடம் போல இல்லை. இவ்வளவு பெரிய வீடா இருக்கு இது யாருடைய வீடு என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதற்கு செந்தில் கொஞ்ச நேரம் பொறுமையா இரு அது அந்த நபரே வந்துருவாரு என்று சொல்கிறார். பிறகு சுதாகர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பாராட்டிய கோபி

அப்போது கோபிக்கு யார் என்று தெரியாமல் இருக்கிறது. பிறகு அவர் விசிட்டிங் கார்டை கொடுத்ததும் அதை பார்த்து நீங்களா என்று கோபி ஆச்சரியப்படுகிறார். பிறகு தன்னுடைய மகன் போட்டோவை செல்போனில் கோபியிடம் காட்டுகிறார். அதைப் பார்த்து ஹாண்ட்ஸமாக இருக்கிறார் என்று கோபிபாராட்டுகிறார்.

சுதாகர் கொடுத்த ஆஃபர்

அப்போது என்னுடைய மகனுக்கு நாங்க நிறைய பொண்ணு பாத்துட்டு இருந்தோம் ஆனால் எந்த பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிட்டாரு உங்க மகளைத்தான் அவனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கான். கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு சம்மதமா என்று கேட்க, கோபி அதிர்ச்சியாகி இருக்கிறார்.

சம்மதம் தெரிவித்த கோபி

அப்போது நீங்க கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொல்லுங்க என சுதாகர் சொல்ல, கோபியும் செந்திலும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில் நீ இப்போ இவங்ககிட்ட சரின்னு சொல்லிட்டு போயிட்டு வீட்டில் போய் எல்லாரிடமும் பேசு என்று சொல்ல, அது போலவே கோபியும் சுதாகரிடம் இனியா கல்யாணத்திற்கு சம்மதம் என்று சொல்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+