ராமமூர்த்திக்கு பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. எழிலை பிளாக்மெயில் செய்யும் ஈஸ்வரி.. ஜெனியின் முடிவு!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் இருக்கும் பண பிரச்சனையை வைத்து வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்து வைத்துவிட ஈஸ்வரி ப்ளான் செய்கிறார்.
எழில் எந்த சூழ்நிலையிலும் வர்ஷினியை திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக மறுத்துக் கொண்டிருக்கிறார்.
செழியன் மற்றும் பாட்டியின் பிளானை ஜெனி தெரிந்துகொண்டு செழியன் இடம் சண்டை இடுகிறார்.
பாக்கியா தன்னை கோபிக்கு திருமணம் செய்து வைத்தது தவறு என்று கூறி ராமமூர்த்திக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

வாக்கு கொடுத்த ஈஸ்வரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் வர்ஷினியின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி கண்டிப்பாக எழில் வர்ஷினியை கல்யாணம் பண்ணிப்பான். இந்த பண பிரச்சனையை வைத்து கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நான் பண்ணுகிறேன் என்று வாக்கு கொடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

எழிலின் பதிலடி
வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி எழிலைக் கூப்பிட்டு இந்த வீட்டு பிரச்சனையை சமாளிக்க வர்ஷினியின் அப்பா பணம் கொடுக்க சம்பாதித்து விட்டார் என்று சொல்ல, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எழில் கேட்க? நீ வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு எழில் நான் அதை பண்ண முடியாது என்று மறுக்க, இதை நீ பண்ணித்தான் ஆகணும் இல்லனா இந்த குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என சொல்கிறார். அப்படி எதுவும் நடக்க நான் விடமாட்டேன் அதுக்காக வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எழில் அங்கிருந்து கிளம்புகிறார். இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

ரகசியத்தை உளறிய தாத்தா
அடுத்து எழில் பாக்கியாவிற்கு போன் செய்து, எல்லா பிரச்சனையும் என்னால் தான் வந்தது என்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பாக்யா ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு கோபி இனியாவை வைத்து ராமமூர்த்திக்கு போன் போட்டு அங்கே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். அது தெரியாத ராமமூர்த்தியும் இனியாவிடம் இங்கே உன்னுடைய சின்ன தாத்தா ஒருவர் ஒரு ஆளை சொல்லி இருக்கிறார். அவர்தான் சொத்துக்களை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இரண்டு நாள்ல அட்வான்ஸ் கொடுத்துருவாங்க, மூணு வாரம் கழிச்சு ரிஜிஸ்ட்ரேஷன். நான் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அங்கே வந்து விடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு கோபி மனதிற்குள்ளே திட்டம் போடுகிறார்.

ஜெனியின் அதிரடி கேள்வி
அடுத்ததாக ஜெனி அறையில் இருக்கும் போது அங்கே செழியன் வருகிறார். அவரிடம் வர்ஷினி எதுக்காக அடிக்கடி இங்கே வருகிறார் என்று கேட்க, அவர் பாட்டியை பார்ப்பதற்காக வருகிறார் என்று செழியன் சொல்கிறார். அப்போது எதற்காக உன்னிடம் பேச வேண்டும் நான் அங்கே இருந்தால் எதற்காக என்னை மட்டும் நீங்கள் கிளம்ப வைக்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு செழியன் சமாளிக்கிறார். பின்பு நீயும் பாட்டியும் எழிலிடம் பேசுவதை பார்த்தேன். பணத்திற்காக வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சொல்றது நல்லா இல்லை என சொல்ல, செழியன் ஜெனி இடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்று விடுகிறார்.

மாமனாரிடம் பாக்கியா கேட்ட கேள்வி
அடுத்ததாக பாக்யாவும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர் .இனியா போன் செய்து விசாரித்த விஷயத்தை ராமமூர்த்தி கூறிக் கொண்டிருக்கிறார். எனக்கு கோபி பக்கத்துல இருந்து கேட்ட மாதிரி இருந்துச்சு என சொல்ல, அதற்கு பாக்யா அவருக்கு உங்க மேல பாசம் அதிகம், அவருக்கு என்னை மட்டும் தான் பிடிக்காது என்று சொல்கிறார். அப்போது பாக்கியா அவருக்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணி வச்சிருக்க கூடாது மாமா என சொல்ல, ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications