ராதிகா கோபிக்கு அடுத்த செக் வைக்கும் தாத்தா.. எழிலுக்கு தெரியவந்த உண்மைகள்.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபியை பழிவாங்குவதற்காக தாத்தா ராமமூர்த்தி பல பிரச்சனைகளை செய்து வருகிறார்.
அமிர்தா விஷயத்தில் வர்ஷினி தான் மொத்த பிரச்சனைக்கு காரணம் என்பதை எழில் தெரிந்து கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் வெளியே சென்று வந்ததில் பாக்கியா மற்றும் ஜெனிக்கு சந்தேகம் தோன்றுகிறது.

தாத்தாவின் அட்ராசிட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டில் ஆரம்பத்தில் காலையில் தாத்தா இனியா மற்றும் மயூ என மூவரும் உக்காந்து இருக்கும்போது கோபி வந்து ஷோபாவில் உட்கார அப்போது காபி இன்னும் வரல என சத்தம் போட ராதிகா இதோ கொண்டு வரேன் என பதிலளிக்கிறார். அடுத்ததாக காபி கொண்டு வந்து கொடுத்தது அதை குடித்துவிட்டு நான் காபி தானே கேட்டேன் இது கசாய மாதிரி இருக்குது. கசப்பு வாயில் வைக்க முடியவில்லை என சொல்ல கோபி குடித்து பார்த்துவிட்டு நல்லா தானே இருக்கிறது நைஸ் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார். எனக்கு நல்லா இல்லை என்று தாத்தா சொன்னதும் ராதிகா நான் உங்களுக்கு பால் கொண்டு வரேன் என்று சொல்கிறார்.

லிஸ்ட் பெருசு
பிறகு பிரேக்ஃபாஸ்ட் என்ன என கேட்க ராதிகா பிரட் என சொல்ல, கோபி ஏதாச்சும் சாண்ட்விச் பண்ணி கொடுப்பா சாப்பிடுங்க என கூறுகிறார். எனக்கு அதெல்லாம் வேண்டாம் என சொல்ல ராதிகா என்ன வேண்டும் என கேட்க பொங்கல், சாம்பார், சட்னி கூட வடை இருந்தா பெட்டரா இருக்கும் என்று கூறுகிறார். ராதிகா அதற்கு சரி செய்து தரேன் என சொன்னதும் லஞ்ச் என்னவென்று கேட்கிறார். ராதிகா தேங்காய்ப்பால் சாதம், முட்டை என சொல்ல அதெல்லாம் நீ செஞ்சு முடிக்க ரெண்டு மூணு நாள் ஆகும். தேங்காய் பால் சாதத்தை என்னால் மென்னு சாப்பிட முடியாது. வத்த குழம்பு வச்சுட்டு அப்பளம் பொரிச்சுட்டு, ஆனியன் போட்டு ஆம்லெட் போட்டு வைத்து விடு போதும் என கூறுகிறார். ஆபீஸ் போக வேண்டாமா? என கேட்க,போ யார் வேணான்னு சொன்னாங்க? இதெல்லாம் செஞ்சிட்டு போ என கூறுகிறார். கோபி என்னப்பா இவ்ளோ பெரிய லிஸ்ட் தரிங்க என கேட்க பாக்கியா சமைச்சு கொடுத்தாளே என கூறுகிறார்.

வெறுப்பேத்தும் இனியா
அடுத்ததாக ராதிகா கோபமாக உள்ளே செல்ல, கோபி பின்னாடியே எழுந்து சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்ய, அவங்க வீட்ல இருந்தாங்க செஞ்சாங்க என சொல்ல அப்போது அங்கு வரும் இனியா எங்க அம்மாவும் வேலைக்கு போனாங்க என சொல்லி ராதிகாவை மேலும் கோபம் ஏற்றுகிறார். ராதிகா கோபமாக இருப்பதை பார்த்து கோபி நான் உனக்கு எந்த உதவி வேணாலும் நான் பண்ணுகிறேன். வெங்காயம் கட் பண்ணவா? என கேட்டு சமாளித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து தாத்தா இனியாவிடம் கிண்டல் செய்து சிரிக்கிறார்.

எழிலுக்கு தெரியவரும் உண்மை
அடுத்ததாக எழில் ஆபீஸில் அமிர்தா வீட்டில் நடந்த விஷயங்களை சதீஷ் இடம் சொல்லிக் கொண்டிருக்க அவர் அமிர்தாவுக்கு போன் போட்டா கண்டிப்பா எடுப்பாங்க என சொல்ல, எழில் போன் செய்கிறபோது அங்கு வர்ஷினி போனை பிடுங்கி வாங்கி பார்த்து அமிர்தா போன் எடுக்க மாட்டாங்க எனக்கு என்ன உங்களுக்கு எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று தோணுது, நீங்க வேணா பாருங்க ஏதாவது சொல்லி க்கொண்டிருக்கிறார். அமிர்தா வீட்டுக்கு போனிங்களா? என எழில் கேட்க நான் எதுக்கு அங்க போறேன் அவா எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது என கூறுகிறார். அடுத்து அமிர்தா வீட்டில் தன்னிடம் கோபமாக பேசியதும் வர்ஷினி அமிர்தா இனி வரமாட்டார் என்று உறுதியாக சொல்வதையும் நினைத்து பார்க்கும் எழில் அவசரமாக சதீஷை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார். அமிர்தாவை பார்க்க போகிறோம் என சொல்லி எழில் அதிர்ச்சி கொடுக்க, நம்மால் அவ்வளவு தூரம் வர முடியாது என்று சொன்னாலும் கேட்காமல் எழில் அமிர்தாவை தேடி சென்று கொண்டிருக்கிறார்.

மாட்டிக்கொள்வார்களா
அடுத்ததாக வீட்டிற்கு வந்த செழியன் மற்றும் ஈஸ்வரி இடம் செல்வி சொல்றதை கேட்டு ஜெனி கோவிலுக்கா போயிட்டு வந்திங்க நெற்றியில் விபூதி இல்லை எனக் கேட்க, இருவரும் திரு திருவென முழிக்க அடுத்து எந்த கோவிலுக்கு போயிட்டு வந்திருக்கீங்க என கேட்க இருவரும் ஆளுக்கு ஒரு கோவிலை சொல்லி மாட்டிக்கொள்கிறார். இருவரிடமும் அனைவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால், ஈஸ்வரி பாக்யாவிடம் இந்த கேள்வி எல்லாம் கோபி இடம் கேட்டு இருந்தால் அவர் இந்த வீட்டை விட்டு போயிருக்க மாட்டார் என்று கூறிக்கொண்டு தனக்கு வேலை இருப்பதாக கிளம்பி சென்று விடுகிறார். செழியனும் கிளம்பி விடுகிறார். இவர்கள் இருவரும் ஏதோ பொய் சொல்கிறார்கள் என்பதை பாக்யா, செல்வி, ஜெனி மூவரும் தெரிந்து கொண்ட பிறகு நான் செழியனிடம் பேசுகிறேன் என ஜெனி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications