அமிர்தாவை கண்டுபிடித்த எழில்..தெரிய வந்த சூழ்ச்சிகள்..கடைசியில் எதிர்பாராத முடிவு..இனி வருவதுஇதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை தேடிக் கொண்டிருந்த எழில் கடைசியில் கண்டுபிடித்திருக்கிறார்.

எழில் அமிர்தா திருமண விஷயத்தில் வர்ஷினியின் சூழ்ச்சிகளை எழில் தெரிந்து கொண்டுள்ளார்.

பாக்கியா எழில் மற்றும் அமிர்தாவுக்கு ஆறுதல் கூறி தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார்.

அமிர்தாவை கண்டுபிடித்த எழில்

அமிர்தாவை கண்டுபிடித்த எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் எழில் அமிர்தாவை தேடி தன்னுடைய நண்பனோடு அலைந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருமுறை அவர்களை ஊரில் டிராப் செய்ததால் அவருக்கு போன் போட்டு அட்ரஸ் கேட்க, அவர் அமிர்தாவின் வீட்டின் அருகில் ஸ்கூல் இருக்கும், மரம் இருக்கும், சுற்றி வயல் இருக்கும் என சொல்ல இங்கே எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்லி எழில் நான் பார்த்துக்கிறேன் வை என போனை வைக்கிறார். பிறகு எழில் கோவிலின் அருகில் வந்து பெண்மணி ஒருவரிடம் கேட்க, அவர் இப்படித்தான் போகணும் என வழியை சொல்லி அனுப்ப எழிலும் சதீஷும் அந்த இடத்திற்கு வந்து சேர்கின்றனர். அப்போது சரியாக அமிர்தா தெருவில் நடந்து கொண்டு வருகிறார். எழில் அமிர்தாவை பார்த்து ஓடோடி சென்று அவரின் முன்பு நிற்கிறார்.

பாக்யாவின் புது ஐடியா

பாக்யாவின் புது ஐடியா

எழிலை பார்த்த அமிர்தா கண்ணீர் விட்டு அழுகிறார். உங்களை எங்கெல்லாம் தேடுவது உங்களை தேடி பிடிக்கிறதுக்குள்ள உயிரே போயிடும் போல, என எழில் சொல்ல சாரி கேட்கிறார் அமிர்தா. அடுத்த பக்கத்தில் பாக்கியா ஆர்டருக்காக வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் அப்படியே இருக்கு ,மாசா மாசம் லோன் வேற கட்டணும், எனக்கு ஒரு ஐடியா தோணுது அதை சொல்றேன் சரியா வருமான்னு சொல்லுங்க என ஜெனி மற்றும் செல்வியிடம் கூறுகிறார். அவர்கள் என்ன ஐடியா என கேட்க தினம் டெலிவரி செய்வதற்காக சாப்பாடு செய்றதை இன்னும் கொஞ்சம் சேர்த்து செய்து நம்ம சமைக்கிற இடத்தில வச்சு விற்கலாமா? என கேட்க ஜெனி நல்ல ஐடியா என சொல்ல, செல்வியும் முதலில் யோசித்து இது சரிப்பட்டு வருமா என கேள்வி எழுப்பி பிறகு நான் உன் கூட இருக்கிறேன் என கூறுகிறார்.

தெரிய வந்த சூழ்ச்சிகள்

தெரிய வந்த சூழ்ச்சிகள்

அடுத்ததாக எழில் அமிர்தாவிடம் ஏன் இப்படி வந்துட்டீங்க, உங்களை பார்க்காமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? என சொல்ல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஒரே குழப்பமா இருந்துச்சு. அதுவும் வர்ஷினி வந்துட்டு போனதும் என்ன அமிர்தா வாய் தவறி சொல்ல, எழில் என்னாச்சு என கேட்ட பிறகு அமிர்தா நடந்த விஷயங்களை எல்லாம் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எழில் நீங்க ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டு இருக்கலாம் என சொல்கிறார். நான், நீங்க நிலா பாப்பா எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க நீங்க இப்படி விட்டுட்டு வந்ததால் நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க, அது என்னைக்கும் நடக்காது என பேசிக் கொண்டிருக்கிறார்.

பாக்கியாவின் ஆறுதல்

பாக்கியாவின் ஆறுதல்

அடுத்ததாக பாக்கியா எழிலுக்கு போன் பண்ணுகிறார். அப்போது எழில் போனை எடுத்து பேச பாக்கியா, அமிர்தாவை பார்த்தியா அவ எப்படி இருக்கா நிலா பாப்பா எப்படி இருக்கு என நலம் விசாரிக்க இதை கேட்டு அமிர்தா கண்ணீர் விடுகிறார். பிறகு பாக்கியா அமிர்தாவிடம் எழில் கொடுத்த வாக்கை என்னைக்கும் தவற மாட்டான். பிடிச்ச விஷயத்துக்காக சண்டை போடணும், இப்படி ஓடக்கூடாது எழில் யாரையும் பாதியில் விட்டுட்டு போக மாட்டான். நான் அவனை அப்படி வளர்க்கல, என அமிர்தாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+