நிஜ வாழ்க்கையில் பல வருட கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் "விஜய் டிவி பாக்கியா”.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிக்கும் சுசித்ரா சென்னையில் புதியதாக வீடு ஒன்றை கட்டி என்று குடிபுகுந்து இருக்கிறார்.
தன்னுடைய பல வருட கனவு நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் டிவி பாக்கியலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவி பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிக்கும் சுசித்ராவை தற்போது தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு சைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் மூலமாகவே இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னுடைய மகன்களாக நடிக்கும் செழியன் மற்றும் எழிலை விடவும் வயதில் இளையவராக இருந்தாலும் தற்போது அம்மா கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். சீரியலில் அமைதியின் சொரூபமாகவும் தன்னம்பிக்கையின் மறு உருவமாகவும் வலம் வரும் பாக்கியலட்சுமி நிஜ வாழ்க்கையில் துரு துருவென கேரக்டர் உடையவராம்.

நிஜத்தில் நண்பர்கள்
சூட்டிங் ஸ்பாட்டில் குழந்தை போல ஜாலியாக சேட்டைகள் செய்து கொண்டிருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு தான் இவர் இருந்து வருவாராம். இவருடைய வில்லியாக ராதிகா கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சீரியலில் தான் வில்லியாக மிரட்டுவார் நிஜ கேரக்டரில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் ரேஷ்மாவுக்கு இணையாக நானும் சாய்த்தவர் அல்ல என்று சுசித்ராவும் ரேஷ்மாவோடு டான்ஸ் போட்டு பல நேரங்களில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

சந்தோஷமான விஷயம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவும் ராதிகாவும் கோபியை திருமணம் செய்து கொண்டு இருவரும் முட்டி மோதிக் கொண்டு முறைத்துக் கொண்டே இருக்கும் நிலையில் நிஜ வாழ்க்கையில் சுசித்ராவும் ரேஷ்மாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். என்னதான் சீரியலில் இவர்கள் அடித்துக் கொண்டாலும் ஷார்ட் முடிந்ததும் இவர்கள் செய்யும் அலப்பறைகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனது தான். இவர்களுடைய ஆட்டம் பாட்டத்தை பார்த்து பலர் அவரா இவர் என்று சொல்லும் அளவிற்கு வியந்து போயிருக்கின்றனர். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் சுசித்ரா தற்போது ரசிகர்களோடு சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

புது வீடு கட்டியாச்சு
கன்னட நடிகையாக இருக்கும் சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியல் மூலமாகத்தான் தமிழ் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சென்னையில் புது வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மீடியாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் பல ஆண்டுகள் கழித்து வீடு வாங்கி இருக்கும் சுசித்ராவுக்கு அவருடைய ரசிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் வீட்டின் கிரகப்பிரவேசத்தில் பட்டுப்புடவையில் கழுத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சுசித்ரா பதிவிட்டு இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications